News February 27, 2026

FLASH: விஜய் தொடர் சிக்கல்

image

கடந்த 2 மாதங்களில் விஜய் பல வழக்குகளில் சிக்கியுள்ளார். கரூர் வழக்கில் CBI விசாரணையை எதிர்கொண்ட விஜய், ‘ஜனநாயகன்’ சான்றிதழ் விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடினார். அதன்பிறகு, சம்பளத்தை கணக்கில் காட்டாததால் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபராதம் சரியே என கோர்ட் உத்தரவிட்டது. தற்போது, விவாகரத்து வழக்கில் கோர்ட்டில் ஆஜராகவுள்ளார். இது அவருக்கு பின்னடைவை தரலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Similar News

News March 7, 2026

OPS என்றால் விசுவாசம்: CM ஸ்டாலின்

image

எப்போதும் அன்போடும், அமைதியோடும் சிரித்த முகத்துடன் இருப்பவர்தான் OPS என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில் பேசிய அவர், OPS என்றால் ஞாபகத்துக்கு வரும் ஒரே சொல் விசுவாசம், ஆனால் துரோகத்தின் அடையாளமாக இருக்கக்கூடியவர் EPS என சாடியுள்ளார். தன்னை காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர் EPS எனவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

News March 7, 2026

ஸ்டாலின் TAX.. நேரடியாக அட்டாக் செய்த விஜய்

image

நிதி சார்ந்த பல <<19322121>>வாக்குறுதிகளை<<>> விஜய் வெளியிட்டார். அப்போது, ஸ்டாலினால் செய்ய முடியாததை நீ எப்படி செய்வாய் என கேட்கிறீர்களா எனக் கேட்டு அதற்கு பதிலும் அளித்தார். அதில், பட்ஜெட் நிதியில் 20% ஸ்டாலினுக்கு செல்வதாகவும், 10% அமைச்சர்களுக்கு செல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அரசுக்குத்தான் வரி கொடுப்போம்; அரசே ஒருவருக்கு வரி கொடுப்பதை ஸ்டாலின் TAX என்று தானே சொல்ல வேண்டும் என்றும் அவர் விமர்சித்தார்.

News March 7, 2026

கட்சி மாறியது ஏன்? OPS

image

கட்சிக்கு விசுவாசமாக இருந்த தன்னை EPS திட்டமிட்டு வெளியேற்றிவிட்டதாக OPS குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் தனது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிமுகவை வஞ்சகமாக EPS அபகரித்துக் கொண்டதாகவும் சாடியுள்ளார். ஆனால், ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்பதற்கு இலக்கணமாக, தன்னை ஸ்டாலின் திமுகவில் இணைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!