News December 15, 2025

FLASH: ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு ₹90.58

image

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 9 காசுகள் சரிந்து ₹90.58 ஆக உள்ளது. இதனால், பெட்ரோல், டீசலுக்கான கச்சா எண்ணெய், <<18569494>>தங்கம்<<>>, வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்வதற்கான செலவினங்கள் அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் அவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Similar News

News December 18, 2025

டெல்லியை குளிர்விக்க EPS ஒத்து ஊதுகிறார்: CM

image

MGNREGA திட்டத்தின் பெயர் மாற்றத்தை கைவிடக் கோரி, ‘பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்’ EPS அழுத்தம் கொடுத்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களை காக்க குரல் கொடுக்க சொன்னால், டெல்லியை குளிர்விக்க EPS அறிக்கை விட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். 125 வேலைநாள்கள் என்பது பேப்பரில் மட்டுமே இருக்கப்போகிறது என அனைவரும் சுட்டிக்காட்டியும் அதை அறியாத அப்பாவியா அவர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News December 18, 2025

சுற்றியுள்ளவர்கள் துரோகம் செய்வது நன்றாய் தெரியும்..

image

இயக்குநர் செல்வராகவன் விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில்தான், தனது X தள பதிவில், அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் துரோகம் செய்வது நன்றாய் தெரியும் என செல்வராகவன் பதிவிட்டுள்ளார். மேலும், பெரும் மலை பனியாய் போகும். அனைத்தும் சரியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். விவாகரத்து குறித்துதான் மறைமுகமாக சொல்கிறாரா என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

News December 18, 2025

விஜய்க்கு பின் சென்ற வாகனம் விபத்து

image

தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை பைக்கில் பின்தொடர்ந்த தவெகவினர் விபத்தில் சிக்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லக்கவுண்டம்பாளையம் மேம்பாலத்தில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயன்றனர். அப்போது, 2 பைக்குகள் மோதி கீழே விழுந்த நிலையில், அவற்றின் மீது பக்கவாட்டில் வந்த பைக்குகள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

error: Content is protected !!