News January 17, 2026
FLASH: புதிய முடிவை அறிவித்தார் ஓபிஎஸ்

எந்தக் காலத்திலும் தனிக் கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என OPS திட்டவட்டமாக அறிவித்துள்ளார். MGR-ன் 109-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு, OPS மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாருடன் கூட்டணி என்பதை இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிப்பேன் எனவும் தெரிவித்தார்.
Similar News
News March 26, 2026
சேலத்தில் உச்சகட்ட பாதுகாப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சேலத்தில் அமைதியை உறுதிப்படுத்தக் காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 58 ரவுடிகள் 6 மாத காலத்திற்கு ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை மீறி ஊருக்குள் நுழைந்தால் அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர். ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 26, 2026
தங்கம் விலை மீண்டும் குறைந்தது

சர்வதேச சந்தையில் நேற்றுடன் ஒப்பிடுகையில் 1 அவுன்ஸ்(28g) $50 குறைந்து $4,529 ஆக உள்ளது. அதேபோல், வெள்ளியும் நேற்று $74 விற்பனையான நிலையில், தற்போது $71 ஆக உள்ளது. இதே நிலை நீடித்தால், நம்மூர் சந்தையில், தங்கம் விலை மீண்டும் குறைய வாய்ப்புள்ளது. சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ₹2,800 அதிகரித்து ₹1,08,800-க்கு விற்பனையானது கவனிக்கத்தக்கது.
News March 26, 2026
ராம நவமி வழிபாட்டின் ‘8’ முக்கிய விதிமுறைகள்!

ராமநவமி நாளான இன்று இவற்றை பின்பற்றுங்கள்: வீட்டை சுத்தமாக வைத்திருங்கள் ◆காலையில் புனித நீராடுங்கள் ◆வீட்டையும் பூஜை அறையையும் பூக்களை கொண்டு அலங்கரியுங்கள் ◆கருப்பு உடைகளை தவிருங்கள் ◆விரதத்தை மேற்கொண்டு ராம நாமத்தை உச்சரியுங்கள் ◆ராமாயணத்தை படியுங்கள் ◆தானம் செய்யுங்கள் ◆மது, அசைவ உணவு, தகாத வார்த்தைகள் கூடாது ◆ராமரின் 14 ஆண்டுகால வனவாசத்தை நினைவுகூரும் விதமாக ஒரு மரத்தையாவது நடுங்கள்.


