News December 25, 2025

FLASH: நீலகிரியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் ஜனவரி 5 தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக செல்ல வேண்டும். அத்தியாவசிய பொருள்கள் ஏற்றி வரும் வாகனங்களை தவிர, அனைத்து கனரக வாகனங்களும், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உதகை நகரத்திற்குள் அனுமதி இல்லை. இந்த தகவலை நீலகிரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News December 25, 2025

மஞ்சூர்: காலையில் மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

image

மஞ்சூர்–கோவை சாலையில் உள்ள கெத்தை மலைப்பாதையில், இன்று அதிகாலை ஒய்யாரமாக நடைபோட்டு சென்ற புலி பயணிகளையும் உள்ளூர் மக்களையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. சாலை ஓரமாக அமைந்துள்ள வனப்பகுதியிலிருந்து திடீரென வெளிப்பட்ட புலி, சில நிமிடங்கள் சாலையில் நடந்து சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

News December 25, 2025

நீலகிரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 25, 2025

நீலகிரி: நிலம் வாங்க மானியம்: விண்ணபிப்பது எப்படி?

image

1).நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2).குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3).2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4).100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5).<>newscheme.tahdco.com<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
6).மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHAREit

error: Content is protected !!