News December 25, 2025
FLASH: நடிகர் விநாயகன் ஹாஸ்பிடலில் அனுமதி

‘ஆடு 3’ படத்தின் ஷூட்டிங்கின்போது நிகழ்ந்த விபத்தில் பிரபல வில்லன் நடிகர் விநாயகன் காயமடைந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தோள்பட்டை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து கொச்சியில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் விநாயகன் விஷாலின் ‘திமிரு’, ரஜினியின் ‘ஜெயிலர்’ உள்ளிட்ட பல படங்களில் வில்லன் ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை வென்றார்.
Similar News
News December 26, 2025
மதுரை: பெண்களை BODY SHAMING செய்யும் தவெக செயலாளர்.?

மதுரையிலும் நேற்று தவெக வடக்கு மாவட்ட செயலாளர் கல்லாணைக்கு எதிராக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அளவில் பதவிகளை வழங்க கல்லாணை மறைமுகமாக பணம் கேட்கிறார். பெண் தொண்டர்களை ‘பாடி ஷேமிங்’ செய்யும் வகையில் கேலி செய்து வருகிறார். அவர் மீது குற்றம் சாட்டு வைக்கப்படுகிறது. கல்லாணை தரப்பில்,அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என்றார்.
News December 26, 2025
திமுக முக்கிய அமைச்சர் கைதாகிறாரா?

கடலூரில் அரசு பஸ் டயர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் 9 பேர் பலியான சம்பவத்தில் <<18672003>>ஓட்டுநர் தாஹா அலியின் கைது<<>> சர்ச்சையாகியுள்ளது. திமுக அரசு, TNSTC பஸ்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதை மறைக்க ஓட்டுநரை பலிகடா ஆக்குவதா என அதிமுக, பாஜகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் அத்துறையின் அமைச்சர் சிவசங்கர், மேலாளரை போலீசார் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். உங்கள் கருத்து என்ன?
News December 26, 2025
சர்வதேச சந்தையில் தொடர்ந்து உயரும் தங்கம்!

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கத்தின் விலையில் இன்றும் மிகப்பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், சர்வதேச சந்தையில் இன்று (டிச.26) 1 அவுன்ஸ்(28g) தங்கம் விலை $20.09 அதிகரித்து $4,499.62 ஆக உள்ளது. வெள்ளியும் 1 அவுன்ஸ்-க்கு $1.10 உயர்ந்து $73.01-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் தங்கத்தின் விலை (தற்போது ₹1,02,560) இன்று கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.


