News January 7, 2026
FLASH: திருப்பத்தூர்: கிணற்றில் தொங்கிய ஆண் சடலம்!

வாணியம்பாடி அடுத்த கொங்கன் வட்டம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தூக்கிலிடப்பட்ட நிலையில் கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வாணியம்பாடி கிராமிய போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனடிப்படையில் வாணியம்பாடி போலீசார் உடலை மீட்டு, தற்கொலையா? கொலையா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 20, 2026
திருப்பத்தூர்: உங்கள் ரேஷன் அட்டை ரத்தாக வாய்ப்பு

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News January 20, 2026
திருப்பத்தூர்: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

திருப்பத்தூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <
News January 20, 2026
வணியம்பாடியில் கொடூர கொலை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி பகுதியை சேர்ந்த பவுனம்மாள் என்ற மூதாட்டியை கடந்த 6ஆம் தேதி தங்கநகைக்காக, மாட்டுக்கொட்டகையில் வைத்து, கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த நிலையில் இதுகுறித்து அம்பலூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த முருகன் என்ற இளைஞரை அம்பலூர் காவல்துறையினர் நேற்று (ஜன.19) கைது செய்துள்ளனர்.


