News November 22, 2025

FLASH: திமுக நிர்வாகி சுட்டுக்கொலை

image

சேலம் கருமந்துறை பகுதியில் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ராஜேந்திரன் தனது விவசாய நிலத்திலிருந்து வீடு திரும்பியபோது அவரை சுட்டுக் கொலை செய்துள்ளனர். நிலத்தகராறு விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும், இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 29, 2026

தேர்தலில் வெற்றிபெறுவது யார்?… புதிய கருத்துக் கணிப்பு

image

இந்தியா டுடேவின் MOOD OF THE NATION சர்வேப்படி, இப்போது லோக்சபா தேர்தல் நடந்தால் NDA கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என முடிவுகள் வெளியாகியுள்ளன. மொத்தமாக 352 இடங்களில் NDA கூட்டணி வெற்றி பெறும் எனவும், இந்தியா கூட்டணி 182 இடங்களை கைப்பற்றும் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக பாஜக 41%, காங்கிரஸ் 20%, மற்றவை 39% வாக்குகளை பெறலாம் எனவும் சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News January 29, 2026

முடிவுக்கு வருகிறதா RTI சட்டம்?

image

RTI சட்டத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை செய்துள்ளது. 2019 -20 காலக்கட்டத்தில் 13.7 லட்சமாக இருந்த RTI விண்ணப்பங்கள் 2023 -24 -ல் 17.5 லட்சமாக அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஆய்வறிக்கை, அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கில் இச்சட்டம் பல நேரங்களில் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், இதன்காரணமாக அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறியுள்ளது.

News January 29, 2026

ரோபோ சங்கருக்கு இறந்தபின் கிடைத்த கௌரவம்

image

ரோபோ சங்கரின் மறைவு தமிழ் சினிமா துறையினர் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் ஈடுசெய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மறைந்த ரோபோ சங்கர் மற்றும் அவரது மகள் இந்திரஜாவுக்கு சிறந்த நகைச்சுவை நடிகர், நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரோபாே சங்கரின் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!