News January 25, 2026

FLASH: திமுகவில் இணைந்த அதிமுக Ex MLA.. EPS அப்செட்

image

அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் சேலத்தில், அதிமுக Ex MLA மாதேஸ்வரன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார். அவருடன் சேலம் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலர் ராஜ்யசபா MP சிவலிங்கம் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். ஆத்தூர் தொகுதியில் 2011 – 2016 வரை MLA ஆக இருந்த மாதேஸ்வரன் திடீரென திமுகவில் இணைந்தது EPS தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

Similar News

News April 3, 2026

திருப்பூர்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

திருப்பூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> voters.eci.gov.in/login <<>>என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News April 3, 2026

வரியே கட்டாமல் ஏமாற்றும் விஜய்: MRK பன்னீர்செல்வம்

image

நடிகர்கள் ஏமாற்றிவிடுவார்கள்; கொள்கை உள்ளவர்கள்தான் தேவை என MRK பன்னீர் செல்வம் பேசியுள்ளார். திண்டிவனம் வேட்பாளர் வன்னியரசை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், சிலர் கட்சி தொடங்கிய உடனே CM ஆக வேண்டும் என்ற கனவில் இருப்பதாக கூறினார். மேலும், வரியே கட்டாமல் நாட்டை ஏமாற்றுபவர், நாட்டு மக்களை ஏமாற்றமாட்டாரா எனவும், பிளாக்கில் டிக்கெட் விற்பவர்கள் எல்லாம் வேண்டுமா என்றும் மறைமுகமாக விஜய்யை சாடியுள்ளார்.

News April 3, 2026

வெள்ளி ஆபரணங்கள்.. கிலோவுக்கு ₹10,000 குறைந்தது

image

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹800 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லை. இதனால் இன்றும் 1 கிராம் வெள்ளி ₹255-க்கும், 1 கிலோ ₹2.55 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. ஏப்.1-ல் 1 கிலோ ₹2.65 லட்சத்துக்கு விற்பனையான நிலையில், தற்போது ₹10,000 குறைந்துள்ளது. இன்று முதல் 3 நாள்கள் விடுமுறை என்பதால், வெள்ளி நகை பிரியர்கள் நகைக்கடைகளில் குவிகின்றனர்.

error: Content is protected !!