News March 23, 2026

FLASH தமிழகத்தை உலுக்கிய வழக்கில் கரூர் கோர்ட் தீர்ப்பு!

image

மதுரையில் 2012 ம் ஆண்டு தேவர் ஜெயந்திக்கு சென்று திரும்பியபோது, கார் மீது பெட்ரோல் குண்டு வீசி 7பேர் கொல்லப்பட்ட வழக்கில், 9 பேரும் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் தீர்ப்பு. இந்த வழக்கில் 11 பேர் கைதான நிலையில், இருவர் கொல்லப்பட்டதால், மணிகண்டன், கார்த்திக், சந்திரசேகர், சோனையா, நாகராஜ், முத்துக்கருப்பன், சந்தோஷ் உள்ளிட்ட 9பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு. மார்ச் 25ல் தண்டனை விவரம் அறிவிப்பு.

Similar News

News April 7, 2026

கரூர்: டிகிரி போதும்.. ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

image

கரூர் மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால்<> CLICK<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதியே கடைசி நாள் ஆகும். (வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க)

News April 7, 2026

கரூர்: பஜ்ஜி, வடை பிரியர்கள் கவனத்திற்கு

image

கரூர் மக்களே, சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி உண்ண வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ( நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க)

News April 7, 2026

மாயனூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி

image

கரூர் மாவட்டம் மாயனூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற சக்திவேல் என்பவர் மீது, அஜித்குமார் ஓட்டி வந்த மினி லாரி மோதியதில் சத்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!