News February 22, 2026

FLASH: தங்கம் விலை மேலும் குறைகிறது

image

IT ஆபிஸ் முதல் டீ கடைகள் வரை தங்கம் விலை பற்றிய பேச்சுகள் அதிகம் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் நம்மில் பலருக்கும் அதில் முதலீடு செய்வதில் தயக்கம் இருக்கிறது. இந்நிலையில், உலக நாடுகள் மீதான வரி விதிப்பு பிரச்னையில் டிரம்பிற்கு பின்னடைவு, போர் சூழல்கள் தணிந்துள்ளது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை மேலும் குறையும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Similar News

News February 28, 2026

விஜய் விவாகரத்து.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

image

சங்கீதாவின் விவகாரத்து மனு விவகாரத்தில் அரசியல் சதி இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, விஜய் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள நிலையில், இப்போது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது அந்த சந்தேகத்துக்கு வலு சேர்ப்பதாக கூறுகின்றனர். இந்த வழக்கில் <<19255547>>ஏப்.20-ல்<<>> விஜய் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் ஆயுதமாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். உங்க கருத்து என்ன?

News February 28, 2026

இன்று திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தை

image

தொகுதி பங்கீடு குறித்து இன்று திமுக தலைமையுடன், காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், தற்போது 35 தொகுதிகள் கேட்டுள்ளது. தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், இன்றைய பேச்சுவார்த்தை கூட்டணி நலனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30 சீட்டுகளுக்கு மேல் திமுக தராது என்றும் பேசப்படுகிறது.

News February 28, 2026

நிறுவனங்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்: மோடி

image

மத்திய அரசின் 2026-27 பட்ஜெட் அறிவிப்புகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி இந்திய நிறுவனங்கள் முதலீடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை அதிகரிக்க வேண்டும் என்று PM மோடி தெரிவித்துள்ளார். வேகம், வெளிப்படைத்தன்மை, மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்த AI தொழில்நுட்பம், தரவு பகுப்பாய்வு ஆகியவற்றை விரிவாக பயன்படுத்தவும், தனியாா் துறை அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல சரியான நேரம் என்றும் குறிப்பிட்டாா்.

error: Content is protected !!