News November 4, 2025

FLASH: தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $54 குறைந்து $3,948-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 22 கேரட் தங்கம் இன்று சவரனுக்கு ₹800 குறைந்த நிலையில், நாளையும் கணிசமாக விலை குறையலாம். SHARE IT

Similar News

News November 5, 2025

கோவை கொடூரத்தால் மிகுந்த வேதனை: கனிமொழி

image

கோவை கொடூரத்தில், குற்றம் செய்தவர்களை கடும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, பாதுகாப்பான சூழலை உறுதிசெய்யாமல் நாம் பண்பட்ட சமூகம் என்று சொல்லிக் கொள்ள முடியாது என X-ல் அவர் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள கனிமொழி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம் என்றும் கூறியுள்ளார்.

News November 5, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..

News November 5, 2025

களத்தில் ரவி அஷ்வினுக்கு பலத்த காயம்

image

காயம் காரணமாக ஆஸ்திரேலிய BBL டி20 தொடரில் இருந்து ரவி அஷ்வின் விலகியுள்ளார். சிட்னி தண்டர்ஸ் அணியில் விளையாட ஓப்பந்தம் செய்யப்பட்டிருந்த அஷ்வின், தொடருக்கு தயாராகும் விதமாக சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, முழங்காலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ஹாங்காங் சூப்பர் சிக்ஸ் தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.

error: Content is protected !!