News January 19, 2026
FLASH- சென்னை: இளைஞருக்கு அரிவாள் வெட்டு.. 3 பேர் கைது

சென்னை அடுத்த வேளச்சேரியில் ZEPTO ஊழியர் பார்த்திபன் என்பவரை வெட்டிக்கொல்ல முயன்ற 3 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பார்த்திபன் என்பவரை வெட்டி கொலை செய்ய முயன்ற விஷ்ணு, சுந்தர், நந்தார் ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில், எஞ்சிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். தீபாவளியன்று பார்த்திபன் தாக்கியதால் பழிக்குப்பழியாக மதுபோதையில் அரிவாளால் வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Similar News
News February 10, 2026
சென்னை: தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி

நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் தர்ஷிகா (14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9 – ம் வகுப்பு படித்து வந்தார். இவர் செல்போனில் அதிக நேரம் விளையாடியதால் அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த தர்ஷிகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். *தற்கொலை எதற்கும் தீர்வல்ல*
News February 10, 2026
பெரம்பூர்: வட மாநிலத் தொழிலாளியிடம் பணம் பறிப்பு

பீகாரை சேர்ந்தவர் ராஜ்குமார் (22). இவர் சொந்த ஊர் சென்று விட்டு, நேற்று பெரம்பூரில் இருந்து ஆட்டோ மூலம் மாத்தூர் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் வியாசர்பாடி, கள்ளுக்கடை ஜங்சன் அருகில் ஆட்டோவை நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர், இவரை மிரட்டி தாக்கி ரூ.10,000/-ஐ பறித்து சென்றார். புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார், பெரம்பூரை சேர்ந்த விக்னேஷ்வரன் (33) என்பவரை நேற்று கைது செய்தனர்.