News August 15, 2025

FLASH: சென்னையில் 50 அடி உயரத்திலிருந்து விழுந்தவர் பலி!

image

சென்னை அருகே உள்ள செம்மஞ்சேரியில் மெட்ரோ ரயில் பணியின் போது இன்று (ஆகஸ்ட் 15) ராட்சத கிரேனில் கான்கிரீட் பாக்ஸ் இணைப்பை தூக்கி சென்றுள்ளனர். அப்போது கிரேனின் கம்பி அறுத்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்த ஜார்கண்டை சேர்ந்த பிக்கிகுமார் பஸ்வான் (23) என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். படுகாயமடைந்த சந்தோஷ் லோரா (23) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News March 3, 2026

சென்னைக்கு புதிய பறக்கும் ரயில் சேவை!

image

பரங்கிமலை – சென்னை கடற்கரை இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில் வருகிற மார்ச் 5ஆம் தேதி பாதுகாப்பு கமிஷனர் சோதனை மேற்கொள்கிறார். வருகிற மார்ச் 7ஆம் தேதி முதல் பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தின் 10ஆவது நடைமேடை வழியாக அடுத்த 20 முதல் 22 நாட்களுக்கு ரயில்களை இயக்கும் வகையில் பயன்பாட்டிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News March 3, 2026

JUST IN: சென்னையில் கோர விபத்து!

image

சென்னை: கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக வாயிலில் இன்று(மார்ச் 3) அதிகாலை இரண்டு கார்கள் மோதி விபத்திற்குள்ளானன. இந்த விபத்தில், அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஜூனு(21) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார் விசாரிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் தற்போது பரபரப்பு நிலவுகிறது.

News March 3, 2026

சென்னை: ஏடிஎம் வாசலில் நூதன மோசடி

image

எம்.கே.பி.நகர், 12வது தெருவைச் சேர்ந்தவர் பிஷு சர்தா (31). கேட்டரிங் ஊழியர். நேற்று முன்தினம் காலை, ஏ.டி.எம்-ல் பணம் செலுத்த சென்றார். அங்கிருந்த நபர், பணத்தை வாங்கி கொண்டு ஆன்லைன் வாயிலாக, வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புவதாக கூறிவிட்டு, அங்கிருந்து தப்பினார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் எம்.கே.பி.நகர் போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!