News December 5, 2025
FLASH: சற்றுநேரத்தில் நாடே எதிர்பார்க்கும் அறிவிப்பு

RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, இன்னும் சற்றுநேரத்தில் நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் REPO RATE குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார். 3 நாள்களாக நடைபெற்ற MPC கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அவர் வெளியிட உள்ளார். இதில், ரெப்போ விகிதத்தை 0.25 புள்ளிகள் குறைக்கவும் (அ) 5.5% அளவிலேயே தொடரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரெப்போ விகிதம் குறைந்தால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்.
Similar News
News March 26, 2026
BREAKING: தவெகவில் இணைந்தார் டி.செல்வம்

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி காங்., மாநில பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட <<19471779>>டி.செல்வம்<<>>, தற்போது தவெகவில் இணைந்துள்ளார். பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்துள்ளார். டி.செல்வத்திற்கு தவெக துண்டை அணிவித்து விஜய் வரவேற்றார். அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் தவெகவில் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
News March 26, 2026
திமுக மண்ணைக் கவ்வுவது உறுதி: விஜய்

மகளிர் பற்றி ஆபாசமாக பேசுவோர் மீது திமுக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது X பதிவில், என் அம்மா, அக்கா, தங்கைகளை திமுகவின் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி பேசியிருப்பதாக விஜய் கூறியுள்ளார். தவெகவை சீண்டுவதாக நினைத்து ஒட்டுமொத்த மகளிரை அவமதிக்கும் காரணத்தால், தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி திமுக மண்ணைக் கவ்வுவது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.
News March 26, 2026
பாதியிலேயே யூ-டர்ன் எடுத்த Air India விமானம்

‘Air India’ நிறுவனத்திற்கு சொந்தமான A350 ரக விமானம் தலைநகர் டெல்லியிலிருந்து இன்று காலை 6 மணிக்கு லண்டன் நோக்கி புறப்பட்டது. சவுதி அரேபிய வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. உடனே பயணிகளின் பாதுகாப்பு கருதி, யூ-டர்ன் எடுத்த அந்த விமானம் சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் டெல்லியிலேயே பத்திரமாகத் தரையிறங்கியது.


