News November 10, 2025
FLASH: சரிவில் இருந்து மீண்ட பங்குச்சந்தைகள்!

கடந்த வாரத்தில் தொடர் சரிவிலிருந்த பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளான இன்று(நவ.10) உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்து 83,404 புள்ளிகளிலும், நிஃப்டி 59 புள்ளிகள் உயர்ந்து 25,552 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Asian Paints, ONGC, Titan Company, Reliance உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News November 10, 2025
மனநலம் குன்றியவர் ஆர்.பி.உதயகுமார்: டிடிவி

விரக்தியின் உச்சத்தில் இருப்பதால்தான் ஆர்.பி.உதயகுமார் தன்னை விமர்சிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.பி.உதயகுமார் மனநலம் குன்றியவர் போல பேசுவதாக கூறிய அவர், அதனால் பாவம் அவருக்காக நான் வருத்தப்படுகிறேன் என கிண்டலடித்துள்ளார். மேலும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்றுதான் பாஜக முயற்சிப்பதாகவும், கட்சியை பிரிக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
News November 10, 2025
BREAKING: நடிகர் அபிநய் காலமானார்

தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமாகி பிரபலமடைந்த நடிகர் அபிநய்(44) உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அண்மையில், இவரது சிகிச்சைக்கு நடிகர் தனுஷ் பண உதவி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News November 10, 2025
புதுப்புது உக்திகளோடு தாக்கும் எதிரிகள்: மு.க.ஸ்டாலின்

DMK இயக்கம் என்று சொல்வதால்தான் திமுகவினருக்கு ஓய்வே இல்லை என கூறுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எவ்வளவு பெரிய தடைகள் வந்தாலும், திமுக இயக்கம் நின்றதே இல்லை; அதுபோல நானும் நிற்க நேரமில்லாமல் வேலை செய்துகொண்டிருக்கிறேன் எனத் தெரிவித்தார். மேலும், எதிரிகள் புதுப்புது உக்திகளோடு நம்மை தாக்க புதுப்புது முயற்சிகள் எடுக்கின்றனர். அதையெல்லாம் முறியடித்து 2026-ல் திமுக வெற்றி பெறும் என்றார்.


