News February 22, 2026
FLASH: சரத்பவார் ஹாஸ்பிடலில் அனுமதி

NCP மூத்த தலைவர் சரத்பவார் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், இன்னும் 2 நாள்களுக்கு சிகிச்சையில் இருப்பார் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். டிஸ்சார்ஜ் ஆன பிறகும், அவர் சிறிது காலம் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News February 28, 2026
ஜெயலலிதா முதுகில் OPS குத்திவிட்டார்: பியூஷ் கோயல்

திமுகவில் இணைந்ததன் மூலம், தன்னை முதல்வராக்கிய ஜெயலலிதாவின் முதுகில் OPS குத்திவிட்டார் என பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார். சுயமரியாதை கொண்ட தமிழக மக்கள் OPS-ஐ மன்னிக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக – பாஜகவின் தொகுதி பங்கீடு குறித்த கேள்விக்கு, நாங்கள் ஒரு குடும்பமாக இருப்பதாகவும், தொகுதி பங்கீடு பற்றி பொதுவெளியில் பேசமுடியாது என்றும் பதிலளித்தார்.
News February 28, 2026
BREAKING: மேலும் ₹2,000 உயர்வு.. அறிவித்தார் ஸ்டாலின்

<<19260381>>கோயில் பூசாரிகளின்<<>> நலனுக்காக 11 அறிவிப்புகளை CM ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பாக, பூசாரிகளின் குழந்தைகளுக்கு முதுநிலை, இளநிலை படிப்புக்கு ஆண்டுக்கு மேலும் ₹2,000 உயர்த்தி வழங்கப்படும் என்றும் பள்ளி படிப்புக்கான நிதி மேலும் ₹1,000 உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார். கிராம கோயில் பூசாரிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பை ₹1.25 லட்சமாக உயர்த்தியும் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
News February 28, 2026
பெரியார் போட்டோ நீக்கம்!

மதுரையில் நாளை PM மோடி பங்கேற்கும் <<19261306>>NDA <<>>கூட்டணி பொதுக்கூட்ட அரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படம் நீக்கப்பட்டுள்ளது. முகப்பு வாயிலில் பெரியார், அண்ணா படங்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், பெரியாரின் படம் மட்டும் அகற்றப்பட்டுள்ளது. பாஜகவின் அழுத்தம் காரணமாக அதிமுக பெரியார் படத்தை நீக்கியதாக விமர்சனம் எழுந்துள்ளது.


