News December 28, 2025
FLASH: உக்கடம் பாலத்திற்கு பெயர் வைத்த CM ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.28) கோவை உக்கடம் மேம்பாலத்திற்கு பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக அறிவித்தார். ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரை 3.8 கிமீ நீளமுள்ள இந்த மேம்பாலம், முன்னாள் ஒன்றிய அமைச்சராக பசுமைப் புரட்சிக்கு அடித்தளமிட்ட சுப்பிரமணியத்தின் பெருமையை போற்றும் வகையில் பெயரிடப்படுவதாக தெரிவித்தார்.
Similar News
News January 1, 2026
கோவையை பதற வைத்த இ-மெயில்!

கோவையில் சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகம் மாவட்ட எஸ்பி அலுவலகம் எஸ்பிஐ வங்கி பிரதான அலுவலகம் என பாதுகாப்பு மிகுந்த பகுதியில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நேற்று 24வது முறையாக கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மெயில் வந்துள்ளது. அந்த மெயிலில் சிங்கள மொழியில் புத்தாண்டு அதிசயம் என தலைப்பிட்டு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
News January 1, 2026
“இந்தியா வல்லரசாகும் வரை கடன் கிடையாது” – வைரல் வியாபாரி

மேட்டுப்பாளையம் நீலகிரி மலையின் அடிவார பகுதியில் இருப்பதால் மலை காய்கறிகள், பழங்கள், உருளைக்கிழங்குகள் மொத்த வியாபார “ஹப்”பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று லோடு ஆட்டோவில் வைத்து பழ வியாபாரம் செய்து வரும் வியாபாரி ஒருவர் தனது ஆட்டோவில் “இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கிடையாது” என பதாகை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த பதாகை தற்போது வைரலாகி வருகிறது.