News February 10, 2026

FLASH: ஆட்டோ, கால் டாக்ஸி ஸ்டிரைக் அறிவிப்பு!

image

எரிபொருள், பராமரிப்பு செலவு அதிகரிப்பு இருந்தும், ஆட்டோ கட்டணம் 13 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என புகார் எழுந்தது. பின்னர், இதுதொடர்பாக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், இன்று சென்னையில் ஆட்டோ, கால் டாக்ஸி ஊழியர்கள், உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் காஞ்சி, செங்கை, திருவள்ளூரிலும் சேவைகள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Similar News

News February 18, 2026

5 சவரன் நகைக்கடன்.. குவியும் மக்கள்

image

2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதுபோலவே தற்போதும் நகைக்கடன் தள்ளுபடி செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதனால், நாமக்கல்லில் வேளாண் கூட்டுறவு சங்கத்தில், பலர் 5 சவரனுக்குள் நகைக்கடன் பெறப் பதிவு செய்துள்ளனர். தற்போது போதிய நிதி இல்லை என சங்கத்தினர் தெரிவிப்பதால், கடன் கோருவோரின் போன் நம்பரை பெற்றுக்கொண்டு வரிசைப்படி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறதாம்.

News February 18, 2026

0, 0, 0.. அபிஷேக் சர்மா பரிதாபங்கள்

image

நடப்பு டி20 உலகக் கோப்பையில் அபிஷேக் சர்மா 3-வது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார். ஏற்கெனவே USA, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக டக் அவுட் ஆகியிருந்த அவர், இம்முறை நெதர்லாந்துக்கு எதிராக ஆர்யன் தத் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அதிரடி வீரர் <<19176257>>அபிஷேக் சர்மா<<>> ஃபார்ம் இழந்திருப்பது ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.

News February 18, 2026

பிப்ரவரி 20 முதல் விருப்ப மனு: திமுக

image

தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 20-ம் தேதி முதல் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. விண்ணப்ப கட்டணமாக பொதுத் தொகுதிக்கு ₹25,000, மகளிர் & தனித் தொகுதிக்கு ₹15,000 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களின் கட்டணம் திரும்ப தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!