News January 5, 2026
FLASH: அதிமுகவில் அடுத்த நீக்கம்

கடந்த சில தினங்களாக அதிமுகவில் <<18758135>>அடுத்தடுத்து பதவி பறிப்பு, நீக்கம்<<>> தொடர்பான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இன்று(ஜன.5) திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் கமாண்டோ பாஸ்கர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக EPS அறிவித்துள்ளார். கமாண்டோ பாஸ்கர், தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 23, 2026
புது புது Course-களை இலவசமாக கற்க வேண்டுமா?

இன்றைய காலகட்டத்தில் பல திறமைகள் இல்லையென்றால் பிழைப்பை ஓட்ட முடியாது. இதனால் பியூச்சரை நினைத்து கவலைப்பட வேண்டாம். உங்கள் திறமைகளை வளர்க்க HubSpot Academy இணையதளத்தில் பல Course-கள் இலவசமாக கிடைக்கின்றன. இதில் Digital Marketing, SEO Strategy, content creation உள்ளிட்ட பயனுள்ள Course-கள் பல உள்ளன. வீடியோ வடிவில் பாடங்கள் அப்லோடு செய்யப்பட்டிருப்பதால் கற்பதற்கும் எளிதாக இருக்கும். SHARE.
News January 23, 2026
நடிகர் முரளி கிருஷ்ணா மறைவுக்கு கமல் இரங்கல்

நடிகரும், பாடகி ஜானகியின் மகனுமான <<18924063>>முரளி கிருஷ்ணா<<>> நேற்று காலமானார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் ஏராளமான சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், என் பிரியத்துக்குரிய சகோதரி ஜானகியின் புதல்வர் முரளி கிருஷ்ணாவின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்; மகனை இழந்து வாடும் ஜானகி அம்மாவுக்கு ஆழ்ந்த இரங்கல் என கமல்ஹாசன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
News January 23, 2026
நடுத்தர மக்கள் தங்கத்துக்கு பதில் இதில் முதலீடு செய்யலாம்

நடுத்தர வர்க்க குடும்பங்கள் மொத்த தொகை கொடுத்து தங்கம் வாங்குவது புத்திசாலித்தனமான முதலீடாக இருக்காது. உங்கள் முதலீட்டு தொகையை இரண்டாக பிரித்து ஒன்று கோல்டு ETF ஸ்கீம்களிலும், மற்றொரு பாதியை போஸ்ட் ஆபீஸ் திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். இன்னும் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கமுடியும் என நினைப்பவர்கள், பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற விஷயங்களில் நிபுணர்களின் அறிவுறுத்தல்படி முதலீடு செய்யலாம். SHARE.


