News August 25, 2024
அனுமதியின்றி கொடி: தவெக தலைமை எச்சரிக்கை

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தவெக நிர்வாகிகள் கட்சி கொடியை ஏற்றி வருகின்றனர். பல இடங்களில் அனுமதியின்றி பொது இடங்களில் கட்சி கொடியை நிர்வாகிகள் ஏற்றி வருவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, அனுமதியின்றி எங்கும் கொடிக்கம்பங்கள் வைக்கக்கூடாது என தொண்டர்களுக்கு தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், உத்தரவை மீறி அனுமதியின்றி கொடியேற்றினால் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்துள்ளது.
Similar News
News March 3, 2026
World Dosa day: தோசை உருவான வரலாறு தெரியுமா..?

வாரத்தில் 7 நாள் தோசை கொடுத்தாலும் சாப்பிடுவேன் என சொல்லும் ஆள்கள்தான் அதிகம். இன்று உலக தோசை தினம். சரியாக முதன்முதலில் எப்போது, எங்கு தோசை உருவானது என்ற எந்த தகவலும் இல்லை. ஆனால், சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் தோசை போன்ற ஒரு உணவின் குறிப்பு இடம்பெறுகிறது. அதே போல, 7-ம் நூற்றாண்டில் உடுப்பியின் கோயில் பகுதிகளில் தோசை உருவானதாக சொல்லப்படுகிறது. உங்களுக்கு பிடித்த தோசை வகையை கமெண்ட் பண்ணுங்க!
News March 3, 2026
இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்கள்!

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, 10 சிறப்பு விமானங்களை INDIGO இயக்கும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து இந்த விமானங்கள் ஹைதராபாத், மும்பை, டெல்லி வந்தடையும். வளைகுடா நாடுகளை வான்வழியாக ஈரான் தாக்குவதால் அங்குள்ள இந்திய தூதரகங்களிடம் களநிலவரத்தை கேட்டறிந்து, உரிய அனுமதி பெற்ற பிறகே இந்த விமானங்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
News March 3, 2026
கூட்டணி.. பாஜகவுடனான பங்கீடு மாறுகிறதா?

பாஜகவுடன் சென்னையில் நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் EPS நேற்று டெல்லி சென்றார். அங்கு இரவில் அமித்ஷாவைச் சந்தித்த அவர், சுமார் 2 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில், பாஜக கேட்கும் 30 சீட்களில் 20 – 22 வரையே கொடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டை EPS எடுத்துரைத்திருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சீட் கணக்கு மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


