News April 17, 2024

தமிழகம் முழுவதும் இன்று கொடி அணிவகுப்பு

image

சென்னையில் 611, மதுரையில் 511, தேனியில் 381 என தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான சாவடிகள் மற்றும் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படும் இடங்களில் இன்று மாலை போலீசார் – துணை இராணுவப் படையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டுப்போடுவதை உறுதி செய்வதற்காகவே இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

Similar News

News November 10, 2025

சென்னையில் மத வழிபாட்டு தலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு

image

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி சென்னையிலும் விமான நிலையம், ரயில் நிலையங்கள், முக்கிய மத வழிபாட்டு தலங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். முக்கியமாக ரயில் நிலையங்களில் பயணிகள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News November 10, 2025

தமிழ் நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்… தொடர் சோகம்

image

சமீப காலமாக தமிழ் திரைத்துறை பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளது. குறுகிய காலத்தில் பல சினிமா நட்சத்திரங்கள் பிரிந்துவிட்டனர். தமிழ் சினிமா இவர்களை என்றும் நினைவில் வைத்திருக்கும். இவர்களது நகைச்சுவை, இசை, திரைப்படங்கள் ஆகியவை எப்போதும் நம் இதயங்களில் உயிர் வாழும். யாரெல்லாம் மறைந்தனர் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.

News November 10, 2025

டெல்லி கார் வெடிப்பு: அமித்ஷாவிடம் PM ஆலோசனை

image

தலைநகர் டெல்லியில் நடத்த கார் வெடிப்பில் 10 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெடிவிபத்து குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், PM மோடி தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனிடையே கார் வெடிவிபத்து குறித்து டெல்லி தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

error: Content is protected !!