News August 7, 2024
22 விளைபொருட்களுக்கு MSP நிர்ணயம்

22 வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக,
மத்திய வேளாண் இணையமைச்சர் பிரதிமா மொண்டல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநில அரசுகளுடனும், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகத் துறைகளுடனும் ஆலோசனை நடத்தியதாகக் கூறிய அவர், தேவை-வினியோக நிலவரம் உள்ளிட்ட பல அம்சங்களை கவனத்தில் கொண்டு, உற்பத்தி செலவைவிட, 50% கூடுதலாக MSP விலையை நிர்ணயித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 12, 2025
324 சமுதாய மக்களும் வளர வேண்டும்: ராமதாஸ்

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ராமதாஸ், வன்னியர்கள் மட்டுமல்ல 324 சமுதாய மக்களும் படிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என வலியுறுத்தினார். அனைத்து சமூக மக்களும் நலமாக வாழ வேண்டும் என்றார். மேலும், இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது என குறிப்பிட்டார்.
News December 12, 2025
சற்றுமுன்: அஜித் குமார் மரணம்… புதிய தகவல்

சிவகங்கை, திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. இதில் 6 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது புதிய திருப்பமாக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட DSP சண்முக சுந்தரம் A7 ஆக சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கூடுதல் குற்றப்பத்திரிக்கையை CBI, மதுரை கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது. இவ்வழக்கில் உள்ள சாட்சியங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீஸ் பாதுகாப்பு உள்ளது.
News December 12, 2025
இதெல்லாம் ஹை பட்ஜெட் தமிழ் படங்கள்

தமிழ் சினிமாவில் நிறைய சிறிய பட்ஜெட் படங்கள் ஹிட் அடித்துவரும் சூழலில், பெரிய பட்ஜெட் படங்களும் அதிகமாகி வருகின்றன. இந்த பெரிய பட்ஜெட் படங்கள் பெரும்பாலும் உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களாகவே உள்ளன. தமிழ் சினிமாவில் இதுவரை மிகவும் பெரிய பட்ஜெட்டில் வெளிவந்த படங்கள் என்னென்னவென்று உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


