News April 11, 2025

ஏப்.15 முதல் மீன்பிடிக்க தடை

image

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் ஏப்.15 முதல் அமலுக்கு வருகிறது. வ.விரிகுடா, பாக் நீர்ச்சந்தி, மன்னார் வளைகுடா இணையும் பகுதியில் வாழும் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வருவதால், இக்காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மூலம் இங்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதனையொட்டி ராமநாதபுரத்தில் மட்டும் 2000-க்கு அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாது.

Similar News

News November 5, 2025

அப்பாவை மிஞ்சிய மகன்!

image

துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘பைசன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த தீபாவளியன்று வெளியான இப்படம், தற்போது வரை தமிழ்நாட்டில் மட்டும் ₹50 கோடி குவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது கடைசியாக வெளியான சீயான் விக்ரமின் ‘வீர தீர சூரன்’ படத்தின் தமிழக வசூலை விட அதிகம். ‘வீர தீர சூரன்’ படம் தமிழகத்தில் ₹38- ₹40 கோடி வரை வசூலித்ததாகவே கூறப்படுகிறது. நீங்க ‘பைசன்’ பாத்துட்டீங்களா.. எப்படி இருக்கு?

News November 5, 2025

BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்ததால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாளாக உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கம், இன்று சவரனுக்கு ₹560 குறைந்து, ₹89,440-ஆகவும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹11,180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹800, இன்று ₹560 என 2 நாளில் ₹1360 குறைந்துள்ளது.

News November 5, 2025

பாஜக இயக்குகிறதா? செங்கோட்டையன் பதில்

image

53 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் தன்னை பாஜக உள்பட யாராலும் இயக்கமுடியாது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். EPS-ன் மகன், மைத்துனர் போன்றவர்கள் அதிமுகவை இயக்குகிறார்கள் என்ற அவர், கட்சியை EPS-ன் உறவினர்கள் எங்கிருந்து, எப்படி இயக்குகிறார்கள் என அனைத்தும் தெரியும் என கூறியுள்ளார். மேலும், EPS-ன் குடும்ப அரசியலால் அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் பேசியுள்ளார்.

error: Content is protected !!