News November 25, 2024
மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று விட்டது. இதையடுத்து, பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை நோக்கி நகரும் போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, வங்கக்கடலுக்குள் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வானிலை மையம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News August 18, 2025
4 ஆண்டுகளில் முடியாதது, 7 மாதங்களில் முடியமா? இபிஎஸ்

கடன் வாங்குவதில் சூப்பர் முதல்வராக ஸ்டாலின் உள்ளார் என்றும், ₹5.38 லட்சம் கடன் திமுக அரசு வைத்துள்ளதாகவும் இபிஎஸ் விமர்சித்தார். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் மக்களுக்கு 46 பிரச்னைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதனை 45 நாள்களில் தீர்க்கப்படும் என்கின்றனர். 4 ஆண்டுகளில் முடியாததை 7 மாதங்களில் நிறைவேற்ற முடியமா என கேட்டார். மக்களின் ஆசையை தூண்டி வாக்குகள் பெறவே இத்திட்டம் என்றார்.
News August 18, 2025
1 கோடி கையெழுத்து இயக்கம்: செல்வப்பெருந்தகை

தேர்தல் ஆணையத்தை (ECI) வைத்து பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக காங்., குற்றஞ்சாட்டியது. ECI, ஒரு தன்னாட்சி அமைப்பு என தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்தார். இதனிடையே, ‘வாக்காளர் அதிகார நடைபயணத்தை’ ராகுல் காந்தி தொடங்கினார். இந்நிலையில், ECI முறைகேடு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
News August 18, 2025
SPORTS ROUNDUP: இந்திய அணியில் சுனில் சேத்ரி இல்லை!

◆சின்சினாட்டி ஓபன்: ஆண்கள் இரட்டையரில் பிரிவில் ராஜீவ் ராம்(USA)- நிகோலா மெக்டிக்(குரோஷியா) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
◆T20 பேட்டிங்கில் பாபர் அசாம் முன்னேற்றம் காண வேண்டி இருப்பதால், Asia Cup-ல் இடம் கிடைக்கவில்லை: PAK பயிற்சியாளர்.
◆தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமி நடத்தும் புச்சிபாபு தொடர் இன்று தொடங்குகிறது.
◆நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: இந்திய அணியில் சுனில் சேத்ரிக்கு தேர்வு செய்யப்படவில்லை.