News July 27, 2024
மீனவர் பிரச்னை: துரை வைகோ கோரிக்கை

தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை, மதிமுக எம்பி துரை வைகோ சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்க சென்ற 25 தமிழக மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Similar News
News March 3, 2026
மதுரை: பள்ளி மாணவி தற்கொலை; அதிர்ச்சி காரணம்

திருமங்கலத்தைச் சேர்ந்த சிறுமி அரசு பெண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால் படிக்குமாறு பெற்றோர் அழுத்தம் கொடுத்ததனால் விரக்தி அடைந்த மாணவி சரிதா நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(மாணவர்கள் தற்கொலை குறித்த எண்ணம் வந்தால் 104ஐ அழைக்கவும்; தற்கொலை தீர்வல்ல.!)
News March 3, 2026
தங்கம் விலை மளமளவென குறைந்தது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த 2 நாள்களில் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால், இன்றைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $20 (இந்திய மதிப்பில் ₹1,831) குறைந்து $5,352.60-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $5 குறைந்து $90.36-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
News March 3, 2026
World Dosa day: தோசை உருவான வரலாறு தெரியுமா..?

வாரத்தில் 7 நாள் தோசை கொடுத்தாலும் சாப்பிடுவேன் என சொல்லும் ஆள்கள்தான் அதிகம். இன்று உலக தோசை தினம். சரியாக முதன்முதலில் எப்போது, எங்கு தோசை உருவானது என்ற எந்த தகவலும் இல்லை. ஆனால், சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் தோசை போன்ற ஒரு உணவின் குறிப்பு இடம்பெறுகிறது. அதே போல, 7-ம் நூற்றாண்டில் உடுப்பியின் கோயில் பகுதிகளில் தோசை உருவானதாக சொல்லப்படுகிறது. உங்களுக்கு பிடித்த தோசை வகையை கமெண்ட் பண்ணுங்க!


