News October 18, 2025
மீனவர்கள் கைது: இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம்

தமிழகம், புதுவை மீனவர்கள் கைதை கண்டித்து, வரும் 27-ம் தேதி சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பின்னர், இலங்கை கடற்படையின் அடக்குமுறை அதிகரித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இந்த ஆண்டு மட்டுமே 180 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 30 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
Similar News
News October 18, 2025
சேலத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை!

சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மோகன்குமார் (30), அடிக்கடி உடல்நலக்குறைவால் மனமுடைந்து நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 18, 2025
அடிக்கடி வரும் தலைவலி… கவனமா இருங்க!

சிலருக்கு அடிக்கடி தலைவலி வருவது உடல் பாதிப்புகளின் அறிகுறி என டாக்டர்கள் கூறுகின்றனர். ரத்த அழுத்தம், மன அழுத்தம், குடல் ஆரோக்கியம் பாதிப்பு போன்ற உடல் பாதிப்புகளால் தலைவலி வரலாம். மேலும், அடிக்கடி ஒற்றைத் தலைவலி வந்தால், மூளையில் கட்டி வரலாம் என்றும் கூறப்படுகிறது. அதே போல, அடிக்கடி தலைவலி வருபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயமும் உண்டு. தொடர் தலைவலி ஏற்பட்டால் டாக்டரை அணுகுங்கள்.
News October 18, 2025
சாதி கொலைகளில் அலட்சியம் காட்டுகிறதா திமுக அரசு?

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சிறப்பாக செயல்படுத்த CM ஸ்டாலின் தலைமையில் குழு உள்ளது. இக்குழு 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டும். ஆனால் 4 ஆண்டுகளில் வெறும் 3 முறையே கூடியிருக்கிறது என அண்ணாமலை பதிவிட்டிருக்கிறார். மேலும், இக்குழுவின் தலைவரான CM இதுபற்றி பேச மறுப்பது ஏன் எனவும் கேட்டுள்ளார். இதுதவிர, ஆட்சியர் தலைமையில் குழு, ADGP தலைமையில் குழு என பல குழுக்கள் செயலற்று இருப்பதாகவும் கூறியுள்ளார்.