News August 5, 2024
ஜெய்சங்கருடன் மீனவ சங்க நிர்வாகிகள் சந்திப்பு

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, தமிழக மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் சந்தித்தனர். இலங்கை கடற்படை தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடனிருந்தார்.
Similar News
News January 17, 2026
28 ஆண்டுகால கோட்டையை தகர்த்த பாஜக

<<18877155>>மஹாராஷ்டிராவில்<<>> நடந்த உள்ளாட்சி தேர்தலில் உத்தவ், ராஜ் தாக்கரேக்களின் கோட்டையாக கருதப்பட்ட மும்பை மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. கடந்த 1996 முதல் தாக்கரே சிவசேனாவின் மேயரே மும்பையை ஆண்டு வந்த நிலையில், இனி பாஜக மேயர் செங்கோல் ஏந்த உள்ளார். இதன்மூலம் 28 ஆண்டுகால கோட்டையை பாஜக தகர்த்துள்ளது. மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பாஜக கூட்டணி 118, சிவசேனா (தாக்கரே) 65 இடங்களில் வென்றுள்ளது.
News January 17, 2026
பற்றி எரியும் ஈரான்.. களத்தில் இறங்கிய புடின்!

<<18874125>>ஈரான்<<>> விவகாரத்தால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர் பதற்றம் நிலவும் நிலையில், அதை தணிக்கும் வகையில் ரஷ்ய அதிபர் புடின் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் மற்றும் இஸ்ரேல் PM நெதன்யாகுவுடன் அவர் போனில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே அமைதி நிலவ மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
News January 17, 2026
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஸ்பிரிட்’ ரிலீஸ் தேதி இதுதான்!

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் பான் இந்தியா படமான ‘ஸ்பிரிட்’, 2027 மார்ச் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ படங்களுக்கு பிறகு சந்தீப் ரெட்டி இயக்கும் படம் என்பதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதேபோல், சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.


