News April 13, 2025
மீன்கள் விலை கிடுகிடு உயர்வு!

சென்னை, நாகையில் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ₹600 – ₹800 வரை விற்பனையான வஞ்சிரம் இன்று ₹1,000-க்கும், ₹200 – ₹300 வரை விற்கப்பட்ட சங்கரா கிலோ ₹600-க்கும் விற்பனையாகிறது. நாளை(ஏப்.14) முதல் ஜூன் 15 வரை வங்கக்கடலில் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள். இதனால் வரும் நாட்களில் மீன்கள் விலை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News December 8, 2025
FLASH: பங்குச்சந்தைகள் கடும் சரிவு

வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிந்து 85,102 புள்ளிகளிலும், நிஃப்டி 225 புள்ளிகள் சரிந்து 25,960 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. JSW Steel, Bharat Elec, Shriram Finance, Interglobe Avi உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் 2 முதல் 8% வரை வீழ்ச்சி கண்டதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
News December 8, 2025
சற்றுமுன்: செந்தில் பாலாஜிக்கு HAPPY NEWS

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தக்கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை இன்னும் தொடங்கப்படாத நிலையில், ஏன் வாரந்தோறும் செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து தேவைப்பட்டால் மட்டும் விசாரணைக்காக அவரை அழைக்கலாம் என ED-க்கு SC உத்தரவிட்டது.
News December 8, 2025
டிகிரி போதும்.. மத்திய அரசில் ₹85,000 சம்பளத்தில் வேலை!

Oriental Insurance Company Limited (OICL) மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 300 Administrative Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ★கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ★வயது வரம்பு: 21- 30 ★தேர்ச்சி முறை: Online Test & Interview ★விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.12.2025 ★சம்பளம்: ₹85,000 வரை ★முழு விவரங்களுக்கு <


