News October 20, 2025
முதல்முறை முதலீட்டாளர்களே.. முகூர்த்த நேரம் குறிச்சாச்சு

பங்குச்சந்தையில் முதல்முறையாக முதலீடு செய்ய உள்ளீர்களா? தீபாவளியை ஒட்டி, முகூர்த்த நேரத்தில் தொடங்கினால், உங்கள் முதலீடு இரட்டிப்பாகும், பொருளாதார வளர்ச்சியும் காணலாம். இதன்படி, நாளை மதியம் 1:45 PM – 2:45 PM என்ற முகூர்த்த நேரத்தில், பங்குச்சந்தையில் உங்கள் முதலீட்டை தொடங்குங்கள். அதேநேரம், அக்.22 பங்குச்சந்தை விடுமுறை, அக்.23 முதல் வழக்கம்போல் பங்குச்சந்தை ஓபன் ஆகும்.
Similar News
News April 1, 2026
இப்படி சேமிக்க டிரை பண்ணுங்க!

நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியவில்லையா? இந்த எளிய முறையில், நீங்கள் மாதம் ₹4,650 வரை சேமிக்கலாம். மாதத்தின் முதல் நாளில் ₹10 உடன் தொடங்கி, 2-ம் நாளில் ₹20, 10-ம் நாளில் ₹100 என ஒவ்வொரு நாளும் ₹10 அதிகரிக்கவும். இதை தவறாமல் பின்பற்றினால் 30-வது நாளில் ₹4,650 உங்களிடம் இருக்கும். இது சிறிய தொகையுடன் பெரிய அளவில் சேமிப்பதற்கான ஒரு எளிய வழியாகும்.
News April 1, 2026
ப்ளீஸ் இந்த பெயர் வேண்டாம்… நடிகை குமுறல்!

கேரளாவில் பாஜக கூட்டணியில் உள்ள Twenty20 கட்சி வேட்பாளராக அஞ்சலி நாயர் களமிறங்குகிறார். இந்நிலையில் வாக்குச்சீட்டு இயந்திரத்தில் அவரது இயற்பெயர் ’அஞ்சலி PV’ என இடம்பெற்றதை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட், ஒரு வேட்பாளர் எப்பெயரில் அறியப்படுகிறாரோ, அப்பெயர்தான் வாக்குச்சீட்டில் இருக்க வேண்டும் என கூறியது. எனினும் இதில் முடிவெடுக்கும் அதிகாரத்தை ECI-க்கு வழங்கியுள்ளது.
News April 1, 2026
ஜப்பானில் கட்டடங்களை உலுக்கிய நிலநடுக்கம்

ஜப்பானில் டோச்சிகி & இபராகி மாகாணங்களில் இன்று காலை 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 48 கிமீ ஆழத்தில் இருந்ததால் கட்டட அதிர்வு காரணமாக மக்கள் பீதியடைந்தனர். எனினும் இதனால் உயிரிழப்போ, சுனாமி அச்சுறுத்தலோ எதுவும் இல்லை தெரிவித்த ஜப்பான் வானிலை மையம், அடுத்த 2 முதல் 3 நாள்களில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகமாக உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


