News December 2, 2024
147 ஆண்டு வரலாற்றில் முதல் முறை: இங்கி. மாஸ் ரெக்கார்ட்

நியூசி.க்கு எதிரான போட்டியில், இங்கி. 104 ரன்களை 12.1 ஓவரில் சேஸ் செய்துள்ளது. 147 ஆண்டு வரலாற்றில் டெஸ்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரன் சேஸ் செய்யும் போது, ரன் ரேட்டை 8ல் வைத்திருந்த முதல் அணி என்ற பெருமையை இங்கி. பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் நியூசி. 348 ரன்களும், இங்கி. 499 ரன்களும் குவித்தன. 2வது இன்னிங்ஸில் நியூசி. 254 ரன்னில் அவுட்டாக, 103 ரன்களை இங்கி. சேசிங் செய்துள்ளது.
Similar News
News September 10, 2025
திண்டுக்கல் கோவிலில் துணை ஜனாதிபதி சாமி தரிசனம்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சி.பி. ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் இன்று துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, மீண்டும் அதே கோவிலுக்கு வருகை தந்து சி.பி. ராதாகிருஷ்ணன் அபிராமி அம்மனை தரிசனம் செய்தார்.
News September 10, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 10, 2025
அணி மாறி வாக்களித்த INDIA கூட்டணி MP-கள்

துணை ஜனாதிபதி தேர்தலில் INDIA கூட்டணியின் 15 எம்.பி.க்கள் NDA வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்துள்ளனர். தேர்தலில் INDIA கூட்டணியின் 315 எம்.பி.க்கள் வாக்களித்ததாக காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவில் சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன. எனவே, INDIA கூட்டணியின் 15 எம்.பி.க்கள் எதிரணி வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்தது உறுதியாகியுள்ளது.