News July 11, 2025

அகமதாபாத் விமான விபத்தில் முதல் அறிக்கை வெளியாகிறது

image

அகமதாபாத்தில் கடந்த மாதம் 12-ம் தேதி 260 பேர் உயிரைப் பலி வாங்கிய விமான விபத்தின் முதற்கட்ட அறிக்கை இன்று வெளியாகிறது. முதல் முறையாக விமானத்தின் கருப்பு பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்பட்டது. கடந்த புதன்கிழமை AAIB, தனது அறிக்கையை நாடாளுமன்ற குழுவிடம் சமர்ப்பித்தது. உலகையே உலுக்கிய இந்த கோர விபத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இன்று வெளியாகவுள்ள அறிக்கைக்காக நாடே காத்திருக்கிறது.

Similar News

News July 11, 2025

செட்டில்மென்ட் ஓ.கே.. முடிந்தது மாறன்ஸ் பிரச்னை (1/2)

image

சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறன், அவரது சகோதரரான திமுக எம்பி தயாநிதி மாறன் இடையே ஏற்பட்ட பிரச்னை, முதல்வர் ஸ்டாலின் தலையிட்டால் முடிவுக்கு வந்துள்ளது. இப்பிரச்னைக்கு எப்படி தீர்வு காணப்பட்டது என்ற புதுத் தகவல் வெளியாகியுள்ளது. கலாநிதிக்கு ஜூன் 10-ல் தயாநிதி நோட்டீஸ் அனுப்பும் முன்பே, 2 பேர் இடையே ஸ்டாலின் சமரச பேச்சு நடத்தியதாகவும், ஆனால் 2 பேரும் அதற்கு உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

News July 11, 2025

செட்டில்மென்ட் ஓ.கே.. முடிந்தது மாறன்ஸ் பிரச்னை (2/2)

image

இதன்பிறகு தயாநிதி அனுப்பிய நோட்டீஸ் குறித்து செய்தி வெளியாக, தேர்தல் வேளையில் இதனால் திமுக மீது விமர்சனம் முன்வைக்கப்படுவதை ஸ்டாலின் விரும்பவில்லை எனவும், எனவே மீண்டும் சமரசம் பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது தயாநிதிக்கு கோடிக்கணக்கில் பணம் தர கலாநிதி ஒப்புக் கொண்டுள்ளார். சன்டிவியில் பங்கு தர மாட்டேன் எனவும் கூறியுள்ளார். முதலில் இதற்கு தயங்கிய தயாநிதி, பிறகு ஏற்றதாக கூறப்படுகிறது.

News July 11, 2025

ஆட்சியைப் பிடிக்க முடியலை… அன்புமணி வருத்தம்

image

தமிழகத்தில் பாமகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்று அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். பாமகவினருக்கு எழுதிய கடிதத்தில், பாமக தொடங்கப்பட்டு 36 ஆண்டுகளாகியும் இன்னும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் இருப்பது பெரும் குறையாக, வருத்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். எனினும், தமிழக மக்களுக்காக, சமூகநீதிக்காக பாமக ஆற்றிய பணிகள் மனதிற்கு நிறைவைத் தருவதாகவும் அன்புமணி கூறியுள்ளார்.

error: Content is protected !!