News March 23, 2024

ரஷ்யாவில் 20 ஆண்டுகளில் முதல் மிகப்பெரிய தாக்குதல்

image

ரஷ்யாவில் 60 பேரை பலிகொண்ட துப்பாக்கிச் சூடு சம்பவம், அந்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற முதல் மிகப்பெரிய தாக்குதலாகும். 2004இல் பெஸ்லான் பள்ளிக்குள் புகுந்த செசன்ய தீவிரவாதிகள், 1,100 பேரை சிறைபிடித்தனர். அவர்களை மீட்கும்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 334 பேர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்துக்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் ரஷ்யாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Similar News

News January 19, 2026

பெண்கள் வயதாக தெரிவதற்கு 5 முக்கிய காரணங்கள்

image

30 வயதைக் கூட தாண்டவில்லை என்றாலும் நாம் வயதானவர் போல் காட்சியளிப்பதற்கு உணவுமுறை, வாழ்க்கைமுறை, பழக்கங்கள் உள்ளிட்டவை முக்கிய காரணிகளாகும். குறிப்பாக, பெண்கள் வயதாக தெரிவதற்கு 5 காரணங்களை சரும நிபுணர்கள் கூறுகின்றனர். அவற்றை SWIPE செய்து பார்த்து, உங்களுடைய வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தினால் இளமையான தோற்றத்தை இழக்கமாட்டீர்கள்.

News January 19, 2026

கூட்டுறவு சங்க நகைக்கடன் தள்ளுபடியா?

image

2021 போலவே, 2026 தேர்தலிலும் பெண்களின் வாக்குகளை குறிவைத்தே திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்கிறது. இதை தான், கனிமொழி ‘திமுகவின் தேர்தல் அறிக்கை <<18897967>>கதாநாயகியாக <<>>இருக்கலாம்’ என குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம், மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும், தேர்தல் நேரத்தில் கூட்டுறவு சங்க நகைக்கடன் (3 சவரன்) தள்ளுபடி அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

News January 19, 2026

டெல்லியில் தமிழக பாஜக முக்கிய ஆலோசனை

image

டெல்லியில் பியூஷ் கோயல் இல்லத்தில் TN பாஜக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அதிமுகவுடனான தொகுதி பங்கீடு, மோடியின் TN வருகை உள்ளிட்டவை குறித்து இதில் பேசப்பட்டுள்ளது. PM பங்கேற்கும் கூட்டத்தில் அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளதால், அது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், L.முருகன், தமிழிசை, வானதி, H.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!