News July 1, 2024
TTF வாசன் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

TTF வாசன் நடிக்கும் IPL (Indian Penal Law) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ராதா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், கருணாகரன் இயக்கும் இந்தப் படத்தில் TTF வாசன் ஹீரோவாக நடிக்கிறார். கார் ரேஸ் கதைக்களத்தை மையமாக கொண்ட இந்தப் படத்தில் கிஷோர், அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். IPL படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News September 20, 2025
அமைப்பின் பெயரை மாற்ற ஜெய்ஷ்-இ-முகமது திட்டமா?

பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது தனது பாகிஸ்தான் பிரிவு பெயரை ’அல் முராபிதூன்’ என மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது என்ற பெயர் தடை செய்யப்பட்டுள்ளதால் நிதி திரட்டுவது கடினமாக இருக்கிறதாம். இதனால், பெயரை மாற்றி e-wallet, UPI போன்ற டிஜிட்டல் வழிகளில் நிதி திரட்டி, 4 பில்லியன் பாக்., ரூபாய் சேகரித்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News September 20, 2025
ரேஷன் பொருள் வாங்கும்போது இத Try பண்ணுங்க..

மக்களே, ரேஷன் கார்டு இல்லாமலேயே பொருள்கள் வாங்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? Mera Ration 2.0 செயலி மூலமாக இது சாத்தியமே. இதற்கு, செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடுங்கள். இதில் காட்டும் டிஜிட்டல் ரேஷன் கார்டை வைத்து பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். பேரிடர் காலங்களில் ரேஷன் கார்டை தொலைத்துவிட்டால், இதை செய்யுங்கள். இந்த முக்கிய தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணலாமே.
News September 20, 2025
துயரம்: தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மரணம்..

இந்தாண்டு தமிழ் சினிமாவுக்கு மிக துயரமான ஆண்டாக மாறியுள்ளது. சமீபத்தில் நடிகைகள் சரோஜா தேவி, பிந்து கோஷ், நடிகர்கள் மனோஜ், ராஜேஷ், நாகேந்திரன், கராத்தே ஹூசைனி, யுவராஜ் நேத்ரன், இயக்குநர் S.S. ஸ்டான்லி, மற்றும் ஸ்டன்ட் மாஸ்டர் மோகன்ராஜ் போன்றோர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். தற்போது காமெடி நடிகர் ரோபோ சங்கர் உயிரிழந்துள்ளார். இதில், பெரும்பாலும் உடல்நலக்குறைவால்தான் மரணித்து இருக்கின்றனர்.