News March 24, 2025
முதல் கறுப்பின பெண் எம்பி ‘மியா லவ்’ காலமானார்

அமெரிக்காவின் பிரபல அரசியல்வாதியும், முன்னாள் எம்பியுமான மியா லவ் (49) புற்றுநோய் பாதிப்பால் காலமானார். ஒஹையோ மாநிலத்தின் முதல் கறுப்பின எம்பி, வெள்ளையின ஆதிக்கம் கொண்ட குடியரசுக் கட்சியின் முதல் பெண் கறுப்பின எம்பி.யாகிய தனிச்சிறப்பு கொண்ட இவர் டிரம்ப்பை தொடர்ந்து விமர்சித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 1, 2025
திமுகவின் குளறுபடியால் மாணவர்கள் அவதி: அன்புமணி

சென்னையில் இன்று கனமழை பெய்தும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் முந்தைய திமுக ஆட்சியில் கலெக்டர்களுக்கு மாற்றப்பட்டது தான் குழப்பங்களுக்கு காரணம் என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். பள்ளிகளுக்கு லீவ் கொடுக்கும் அதிகாரம் மீண்டும் கல்வித்துறைக்கே மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியிறுத்தியுள்ளார்.
News December 1, 2025
எப்படி சுனாமி வருகிறது?

கடலுக்கு அடியில் உள்ள டெக்டானிக் பிளேட்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதனால், கடல் சீற்றமடைந்து சுனாமி உருவாகிறது. பொதுவாக ரிக்டர் அளவில் 8.0 மேல் பூகம்பம் பதிவானால் மட்டுமே பெரியளவில் சுனாமி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். சுனாமி வருவதற்கு முன் கடல் நீர் 100-200 அடிகள் வரை உள்நோக்கி இழுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. SHARE.
News December 1, 2025
87 மொபைல் லோன் ஆப்களுக்கு தடை

இன்றைய காலகட்டத்தில் வங்கிகளை விட 3-ம் தரப்பு மொபைல் ஆப்கள் மூலம் கடன் வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. ஆனால், இதில் பல முறைகேடுகளும் நடக்கின்றன. அந்த வகையில், சட்டவிரோதமாக கடன் வழங்கிய 87 ஆப்களை அரசு தடை செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ஆன்லைனில் கடன் வழங்கும் நிறுவனங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.


