News September 1, 2024

முதலில் தள்ளுவண்டி, இப்போ ₹29,208 கோடி நிறுவன அதிபதி

image

தமிழக தொழிலதிபர்களில், சென்னையை சேர்ந்த ஆர்.ஜி. சந்திரமோகன் மிக முக்கியமானவர். ஆரம்பத்தில் தள்ளுவண்டி வியாபார ஐஸ் தொழில் செய்த அவர், பின்னர் அருண் ஐஸ்க்ரீம், ஆரோக்யா பால், ஹட்சன் பிராண்டில் தயிர், பன்னீர், நெய் உள்ளிட்டவற்றை விற்று ₹29,208 கோடி சாம்ராஜ்யமாக மாற்றினார். கணித தேர்வில் தோல்வியடைந்ததால், தினசரி ₹65 சம்பளத்தில் வேலை, பிறகு தொழில் என இடர்பாடுகளை சந்தித்தே உயர்ந்துள்ளார்.

Similar News

News July 9, 2025

திருமாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்: இபிஎஸ் சாடல்

image

அதிமுக – பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்திருந்தார். இதுபற்றி பேசிய இபிஎஸ், அதிமுகவும், பாஜகவும் இணக்கமாக இல்லை என திருமா கண்டுபிடித்துவிட்டாரா? டாக்டர் பட்டம் கொடுக்கலாம் என்றார். எங்களுக்கும் கூட்டணி கட்சிக்கும் விளக்கம் சொல்வதற்கு அவர் யார்? என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் NDA கூட்டணிக்கு இபிஎஸ் தான் தலைவர் என அமித்ஷா கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.

News July 9, 2025

நான் கைதாகவில்லை: சௌபின் சாஹிர் விளக்கம்

image

மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்புக்கு ₹7 கோடியை கடனாக பெற்றுக்கொண்டு அசல் தொகையோ, 40% லாபத்தையோ <<16994564>>சௌபின் சாஹிர்<<>> தராததால் அவர் கைதாகி சொந்த ஜாமினில் வெளிவந்தார். இந்நிலையில் இது குறித்து பேசிய சௌபின் சாஹிர், தன்னை யாரும் கைது செய்யவில்லை என்றும், தன் பக்கம் நியாயங்களை உணர்த்தும் வகையிலான அனைத்து ஆவணங்களையும் காவல்துறை, நீதிமன்றத்திடம் சமர்த்திருக்கிறேன், விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்றார்.

News July 9, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶ இயல்: அரசியல் ▶அதிகாரம்: இறைமாட்சி ▶குறள் எண்: 390 ▶குறள்: கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி. ▶ பொருள்: கொடுத்தலும், முகமலர்ந்து பேசுதலும், முறைசெய்தலும், குடிகளைக் காத்தலும் ஆகிய இந்நான்கும் உடையவன் வேந்தர்களுக்கெல்லாம் விளக்காவான்.

error: Content is protected !!