News April 26, 2025

எல்லையில் துப்பாக்கி சூடு… அதிகரித்த பதற்றம்

image

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு எல்லை கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூட்டை தொடங்கியுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News March 16, 2026

பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

image

லீவு என்றாலே பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சிதான். அந்த வகையில், இந்த வாரத்தில் 3 நாள்கள் விடுமுறையாகும். மார்ச் 19 (வியாழக்கிழமை) தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி விடுமுறையாகும். இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை, ஞாயிற்றுக்கிழமை என அடுத்தடுத்து விடுமுறையாகும். 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு நெருங்கி வருவதால், விடுமுறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள் மாணவர்களே!

News March 16, 2026

தனித்து விடப்பட்ட ராமதாஸ்

image

தை பிறந்தால் வழி பிறக்கும், நமக்கான வாகனம் அருகே வந்துவிட்டது என கூறி வந்த ராமதாஸ், தற்போது வரை எந்தக் கூட்டணியிலும் இணையவில்லை. தைலாபுரத்தில் தன்னை சந்தித்த சசிகலாவிடம் கூட்டணியில் சேர விருப்பமில்லை என அவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என <<19396552>>CTR நிர்மல்குமார்<<>> கூறியுள்ளார். இதனால் ராமதாஸ் தனித்து விடப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News March 16, 2026

இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

image

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை இந்த படிவத்தை <>கிளிக்<<>> செய்து நிரப்புங்கள். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!