News April 26, 2025
விஜய் கருத்தரங்கு இடத்தில் தீ விபத்து

கோவையில் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெறும் இடம் அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து பிரதான சாலை வரை ரோட் ஷோ நடத்திய விஜய்-க்கு கட்சி நிர்வாகிகள் தாரை தப்பட்டை கிழிய வரவேற்பு கொடுத்தனர். பின்னர், அவர் கருத்தரங்கு மேடைக்கு சென்றார். அப்போது, திடீரென்று கருத்தரங்கு நடக்கும் இடம் அருகே திடீரென்று தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து, உடனே அணைக்கப்பட்டது.
Similar News
News September 13, 2025
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: CM ஸ்டாலின்

செப்.15-ம் தேதி தயாராக இருக்க திமுகவினருக்கு ஸ்டாலின் நாள்தோறும் புதிய கட்டளைகளை விடுத்து வருகிறார். தற்போது, ‘தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் ஆகியவற்றை எந்நாளும் காப்பேன்! ஆதிக்கச் சக்திகளின் முன் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என உறுதிமொழி ஏற்க தயாராகுங்கள் என ஆணையிட்டுள்ளார். அண்ணாவின் பிறந்தநாளில் 1 கோடி பேர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திமுக தீவிரப்படுத்தியுள்ளது.
News September 13, 2025
மத்திய அரசில் 1,543 வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷனில், களப்பொறியாளர், கள மேற்பார்வையாளர் பணிகளுக்கு 1,543 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, எலெக்ட்ரிக்கல்/சிவில் பிரிவுகளில் பி.இ., பி.டெக்., பி.எஸ்சி. (பொறியியல்) பட்டமும், 1 வருட அனுபவமும் அவசியம். இதற்கு, மாதம் ₹30,000-₹1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும் இந்த வேலைக்கு செப்.17-க்குள் https://www.powergrid.in/en -ல் விண்ணப்பியுங்கள். SHARE பண்ணுங்க.
News September 13, 2025
BCCI புதிய தலைவர் இவரா?

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே அடுத்த BCCI தலைவர் என தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் ரோஜர் பின்னி BCCI தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். வரும் 28-ல் BCCI தேர்தல் நடப்பதாக இருந்தது. ஆனால், அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களும் கிரண் மோர் வரவையே ஆமோதித்ததாக கூறப்படுகிறது. இந்திய அணிக்காக 49 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டிகளில் கிரண் மோர் விளையாடியுள்ளார்.