News August 31, 2025
MP மஹுவா மொய்த்ரா மீது FIR பதிவு

அமித்ஷா குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்த TMC MP மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் போலீசார் FIR பதிவு செய்துள்ளனர். வங்கதேச ஊடுருவல்காரர்களை தடுக்க தவறிய அமித்ஷாவின் தலையை வெட்ட வேண்டும் என அவர் கூறியிருந்தார். இந்த கருத்து சர்ச்சையான நிலையில், பல பாஜக தலைவர்கள் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். ஆனால், அவரது பேச்சு தவறாக திரித்து பரபரப்படுவதாக TMC விளக்கம் அளித்தது.
Similar News
News August 31, 2025
இனி எலெக்ட்ரிக் கார்களின் விலை உயரும்?

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் செப்., 3 – 4-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் எலெக்ட்ரிக் கார்களுக்கான ஜிஎஸ்டி தற்போது 5% இருக்கும் நிலையில், அதை 18% உயர்த்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ₹20 முதல் ₹40 லட்சம் வரையிலான எலெக்ட்ரிக் கார்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் ₹20 லட்சத்திற்கு குறைவான கார்களுக்கான ஜிஎஸ்டி 5% சதவீதமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
News August 31, 2025
ஸ்டாலின் சுற்றுலா சென்றுள்ளார்: அன்புமணி

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சுற்றுப் பயணம் செல்லவில்லை, சுற்றுலா சென்றுள்ளார் என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். தி.மலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு, அவர் அப்பகுதியில் நடைபயண தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, திமுக மீது மக்கள் கோபத்தில் இருப்பதாக குறிப்பிட்ட அன்புமணி, திமுகவின் கொடுங்கோல் ஆட்சியை அகற்ற வேண்டும் என காட்டமாக பேசினார்.
News August 31, 2025
தீபாவளி பரிசாக மாதம் ₹1,000.. விரைவில் அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களில், தகுதியானவர்கள் குறித்து தீபாவளிக்கு முன்னதாக அறிவிப்பு வெளியாகலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு மாத காலமாக விண்ணப்பங்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் தகுதியானவர்களின் முதல் பட்டியல் வெளியாகும் எனவும், இவர்களுக்கு தீபாவளி பரிசாக வரும் அக்., 15-ம் தேதி முதல் கட்டமாக பணம் அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.