News March 21, 2025
8ஆவது முறையாக பின்லாந்து முதலிடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 8வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது பின்லாந்து. சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்காக 147 நாடுகளில் மக்களின் சமூக ஆதரவு, சுகாதாரம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் குறித்த மக்கள் எண்ணம், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டன. இந்தப் பட்டியலில் இந்தியா 118வது இடத்தில் உள்ளது.
Similar News
News March 21, 2025
8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில் கோவை, குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. அதேபோல், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் IMD குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.
News March 21, 2025
பாஜக, அதிமுக கூட்டணியா? இபிஎஸ் விளக்கம்

பாஜக, அதிமுக கூட்டணி அமையலாம் என பரவலாக பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து இபிஎஸ்சிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், திமுகவை தவிர அதிமுகவுக்கு வேறு எந்தக் கட்சியும் எதிரி இல்லை. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். இதுவே அதிமுகவின் நிலைப்பாடு. தேர்தல் நெருங்குகையில் அதிமுக கூட்டணி அமைக்கும். திமுக வேண்டுமானால், அவர்களுடன் (பாஜக) கூட்டணி அமைக்கலாம் என்றார்.
News March 21, 2025
விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை… சோகக் கதை

90களில் தமிழ், தெலுங்கு படங்களில் நாயகியாக கொடிக்கட்டி பறந்தவர் வினிதா. இவர் பெரிய குடும்பம், கட்டபொம்மன், சின்ன ஜமீன், வியட்நாம் காலனி, மிஸ்டர் மெட்ராஸ் உள்பட 70 படங்களில் நடித்து தன் அழகாலும், திறமையாலும் ரசிகர்களை ஈர்த்தார். காலத்தின் கோலம், அவர் விபச்சார வழக்கில் சிக்கி கைதானார். பின் நிரபராதி என வெளியே வந்தாலும், 8 ஆண்டுகளுக்கு பின் ஒரே படத்துடன் அவரின் கரியர் முடிவுக்கு வந்தது சோகம் தான்.