News September 3, 2025
இந்தியாவுடன் கண்ணியமாக நடக்க வேண்டும்: பின்லாந்து

சீனாவில் நடந்த SCO மாநாடு ஐரோப்பா, USA-விற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார். இந்தியாவிடம் கண்ணியமான வெளியுறவுக் கொள்கையில் ஈடுபடாவிட்டால், உலக அரங்கில் தோற்றுவிடுவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். முன்பு மேற்குலக நாடுகளே ஏகாதிபத்திய சக்திகளாக விளங்கிய நிலையில், SCO மாநாடு ரஷ்யா, சீனா, இந்தியாவை ஒன்றிணைந்ததால் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News September 5, 2025
தாக்கம் வேறு, ஆட்சி வேறு; அண்ணாமலை சாடல்

விஜய்க்கு மாஸ் இருக்கிறது, எனவே அவர் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அண்ணாமலை கூறியுள்ளார். அதேநேரம், தாக்கம் என்பது வேறு, ஆட்சி அமைப்பது வேறு என்றும், அதிமுக – பாஜக கூட்டணியே தேர்தலில் வெற்றி பெறும் எனவும் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். TTV தினகரன், பிரேமலதா உள்ளிட்டோர், வரவிருக்கும் 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறியிருந்தனர்.
News September 5, 2025
ஆசிரியர் தினத்தில் உங்கள் நினைவுக்கு வருவது யார்?

‘இன்னைக்கி மட்டும் அந்த டீச்சர் வரலேனா உனக்கு சூடம் ஏத்துறேன் கடவுளே’ என்று வேண்டிய பலரும், ‘உங்களால தான் சார் இப்போ இந்த இடத்துல இருக்கேன்’ என்று கூறுவது உண்டு. ஏன், நாமே பல நேரங்களில் நினைத்திருப்போம். அப்படிப்பட்ட ஆசிரியர்களை கொண்டாடும் நாள் தான் இன்று. இந்த நாளில் உங்களுக்கு பிடித்த, மறக்க முடியாத ஆசிரியரிடம் நீங்கள் கேட்க வேண்டியது ஏதாவது இருந்தால் என்ன கேட்பீர்கள்?
News September 5, 2025
தோனியே இன்ஸ்பிரேஷன்: பாக்., மகளிர் அணி கேப்டன்

எனக்கு கேப்டன் பதவி கிடைத்தபோது, தோனியை போல் ஆக வேண்டும் என்று நினைத்தேன் என பாக்., மகளிர் அணி கேப்டன் ஃபாத்திமா சனா தெரிவித்துள்ளார். தோனியே தனது இன்ஸ்பிரேஷன் என கூறி நெகிழ்ந்துள்ளார். கேப்டனாக மைதானத்தில் அவரது முடிவெடுக்கும் திறன், வீரர்களை ஆதரித்து செல்லுதல் ஆகியவற்றில் இருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். தோனியின் கேப்டன்சியில் உங்களுக்கு பிடித்தது எது?