News August 27, 2024

30 பேரின் கைரேகைகளை பதிவு செய்து விசாரணை

image

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அடகு கடையில் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 278 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணம் கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் நேற்று(ஆக.,26) வரை முப்பது பேரின் கைரேகையை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில் உள்ளூரை சேர்ந்த 2 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருவதாக தகவல்.

Similar News

News December 7, 2025

நெல்லை: ஆதார் கார்டில் ADDRESS மாற்றம்.. FREE

image

நெல்லை மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.இங்கே <>கிளிக்<<>> செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News December 7, 2025

நெல்லை: மாடு குறுக்கே வந்ததால் தொழிலாளி பலி!

image

தச்சநல்லூரை சேர்ந்தவர் கணேசன் (55). கார் ஒர்க் ஷாப் தொழிலாளி. இவர் பணி முடிந்து மணிமூர்த்தீஸ்வரம் வழியாக பைக்கில் சென்ற போது சாலையின் குறுக்கே வந்த மாடு மீது பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். மாநகரப் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 7, 2025

நெல்லையில் தொழிலாளி தற்கொலை

image

சிவந்திபட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (45) சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி இவர்களுக்கு 16 ஆண்டுகளாக குழந்தை இல்லை. குழந்தை ஏக்கத்தில் இருந்த முத்துக்குமார் விஎம் சத்திரம் அருகே நான்கு வழிச்சாலையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!