News April 14, 2025

ரேஷனில் கைவிரல் ரேகை பதிவு.. அல்லாடும் முதியோர்

image

ரேஷன் அட்டைகளில் கைவிரல் ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெறுகிறது. முன்பு பயோமெட்ரிக் பதிவு 40% உறுதியானால் போதும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது 90% ஆக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் முதியோர் பலர் கைவிரல் ரேகை தேய்ந்த நிலையில், பயோமெட்ரிக் பதிவாகாமல் அல்லாடுகின்றனர். பலர் 30 நிமிட நேரம் வரை காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கவனிக்குமா அரசு?

Similar News

News April 15, 2025

மகளிர் உரிமைத் தொகை: வங்கி கணக்கை செக் பண்ணுங்க

image

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் 20-வது தவணை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சற்றுமுன் வரவு வைக்கப்பட்டது. ஒரு கோடியே 6 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஏப்ரல் மாதத்திற்கான ₹1,000 செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக ₹10,600 கோடி செலவிடப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான நபர்களைச் சேர்க்க விரைவில் விரிவாக்க அறிவிப்பு வெளியாகவுள்ளது. உங்கள் குடும்பத்திற்கு ₹1000 வருகிறதா?

News April 15, 2025

TN-ல் இருந்து ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலை பராமரித்து வரும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு மிரட்டல் மெயில் வந்துள்ளது. இதனால் ராமர் கோயிலின் பாதுகாப்பை அதிகரித்த போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மர்ம நபர் ஒருவர் மிரட்டல் மெயிலை அனுப்பியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

News April 15, 2025

பருவமழை குறைவாக பெய்யும்: IMD

image

தமிழகத்தில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்யும் என்று IMD அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும் காலமாக இருக்கிறது. அதில், நடப்பாண்டில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இயல்பான 87 செ.மீட்டரை விட அதிகம் பெய்யும் என்றும் தமிழ்நாட்டில் குறைவாக பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!