News November 11, 2024
பிஞ்சு மாணவர்கள் வாயில் பிளாஸ்திரி: அராஜகம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கு பயிலும் மாணவ – மாணவிகள் வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதிகம் பேசுவதாகக் கூறி, ஒரு மாணவி மற்றும் 4 மாணவர்களின் வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News August 5, 2025
சிவகார்த்திகேயனின் இந்த ஒரு ஆசை நிறைவேறுமா?

ஒரு படம் வெற்றி அடைந்த பிறகு, அதை 2ம் பாகமாக எடுத்து, அதில் நடிக்க தனக்கு எப்போதும் பயமாக இருக்கும் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஆனால், ‘மாவீரன்’ படத்தில் மட்டும் 2ம் பாகத்தில் நடிக்க வேண்டும் என ஆசை இருப்பதாகவும், அப்படி ஒரு தனித்துவமான கதை அதில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார்.
News August 5, 2025
80% குணமாகும் கேன்சர் தடுப்பூசி இலவசம்!

கேன்சருக்கான தடுப்பூசியை மேம்படுத்தி வருவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கேன்சர் செல்களை கண்டறிந்து தேடி கொல்லும் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்திக்கு பயிற்சி அளிக்கும் வகையில் தடுப்பூசி மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. பரிசோதனையில் 75-80% வரை கேன்சர் குணமாவதாகவும், விரைவில் நாடு முழுக்க பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
News August 5, 2025
மோடி ஆட்சியில் 17 கோடி வேலைவாய்ப்பு: அமைச்சர்

கடந்த 10 ஆண்டுகளில் 17 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். கடந்த 16 மாதங்களில் மட்டும் 11 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், முந்தைய UPA ஆட்சிகாலத்தில் வெறும் 3 கோடி வேலைவாய்ப்புகள் மட்டும் தான் உருவாக்கப்பட்டதாகவும் விமர்சித்துள்ளார்.