News November 25, 2024
Finance Tips: வெள்ளியில் முதலீடு செய்யலாமா?

தங்கத்தைப் போல வெள்ளியை முதலீடாக கருதினால், அதை ETF வடிவில் வாங்கலாமென நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அக்.31 உடன் முடிந்த கடந்த ஓராண்டில், வெள்ளி ETFகள் 32% வருவாய் ஈட்டி கொடுத்துள்ளது. எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தியில் வெள்ளி தேவைப்படுவதால், பல நாடுகள் அதை கொள்முதல் செய்கின்றன. இதற்கு GST உள்ளிட்ட செலவுகள் உண்டென்பதால் 10% Portfolio-ஐ வெள்ளிக்கு ஒதுக்கலாம் என்றும் அறிவுறுத்துகின்றனர்.
Similar News
News November 27, 2025
அடுத்த தலைவர் தவெகவில் இணைந்தார்

செங்கோட்டையனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த Ex MLA-வும், பாஜக நிர்வாகியுமான வெங்கடாஜலம் தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் MLA, மா.செ.,வாக இருந்த இவர், 2023-ல் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது அங்கிருந்து விலகி தவெகவுக்கு தாவியுள்ளார். KAS கட்சியில் இணையும் நிகழ்ச்சியில்தான் இவரும் இணைந்தார். எனவே, இவரையும் செங்கோட்டையன் தான் தவெகவுக்கு அழைத்து சென்றாரா என கேள்வி எழுந்துள்ளது.
News November 27, 2025
₹48,000 சம்பளம்.. 750 பணியிடங்கள்: APPLY

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் காலியாகவுள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி (LBO) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: டிகிரியுடன் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: 20 – 30. சம்பளம்: ₹48,480 – ₹85,920. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.1. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News November 27, 2025
திமுகவிலிருந்து யாரும் பேசவில்லை: செங்கோட்டையன்

தவெகவில் இணைவதற்கு முன் திமுக தரப்பில் இருந்து செங்கோட்டையனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், திமுகவில் இருந்து யாரும் என்னை சந்திக்கவில்லை, கட்சியில் சேர அழைக்கவில்லை என செங்கோட்டையன் மறுத்துள்ளார். சேகர்பாபு உடன் நான் இருப்பதை போன்ற ஒரு புகைப்படம் கிடைத்தால் காட்டுங்கள் பதிலளிக்கிறேன் எனவும் அவர் கேட்டுள்ளார்.


