News May 31, 2024
நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

நாடு முழுவதும் இரண்டரை மாதங்களாக அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்றோடு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து நாளை இறுதிக்கட்ட (7ஆவது) வாக்குபதிவு நடைபெறவுள்ளது. 543 மக்களவைத் தொகுதிகளில் ஏற்கெனவே 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்ட நிலையில் நாளை 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
Similar News
News August 7, 2025
சர்ச்சையாகும் ஸ்டாலின், உதயநிதி பதிவு

வாக்கு அரசியலுக்காக ‘ஆணவப்படுகொலைக்கு தனிச்சட்டம்’ என்ற கோரிக்கையை ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை என சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், நேற்று கூட்டணிக்கட்சி தலைவர்கள் ஸ்டாலினை சந்தித்து ‘தனிச்சட்டம்’ குறித்து வலியுறுத்தினர். அதுபற்றி எதுவும் குறிப்பிடாமல், கூட்டணிக் கட்சி தலைவர்கள் உடல்நலம் குறித்து விசாரித்ததாக ஸ்டாலின், <
News August 7, 2025
300 லிட்டர் தாய்ப்பால் தானம்! சாதனை படைத்த திருச்சி பெண்

திருச்சி காட்டூரை சேர்ந்த செல்வ பிருந்தா(32), உண்மையான தாய்மையின் உதாரணம். கடந்த 22 மாதங்களில், தனது குழந்தைகளின் தேவைக்கு அதிகமாக சுரந்த 300.17 லிட்டர் தாய்ப்பாலை, திருச்சி மகாத்மா காந்தி ஹாஸ்பிடலுக்கு தானமாக வழங்கியுள்ளார். இதற்காக இந்தியா புக், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் அவர் இடம் பெற்றுள்ளார். ‘பிற குழந்தைகளுக்கும் பாசம் பஞ்சமில்ல’ என உணர்ந்து உதவிய இந்த தாய்க்கு பாராட்டுகள் குவிகிறது.
News August 7, 2025
கருணாநிதி நினைவிடத்தில் CM ஸ்டாலின் மரியாதை!

கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் CM ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின், சுமார் 2 KM தூரம் <<17327639>>அமைதி பேரணி<<>> சென்றார். அவருடன் உதயநிதி, கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், MP-க்கள், MLA-க்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.