News January 5, 2025

வாக்காளர் இறுதிப்பட்டியல் நாளை வெளியீடு

image

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்தல், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்காக நவம்பர் மாதம் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தங்கள், விலாசம் மாறுதல் என 23.09 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன் மீதான பரிசீலனை பணிகள் முடிந்த நிலையில், நாளை ஜனவரி 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

Similar News

News September 13, 2025

FIRST LOVE: மறக்க முடியாமல் தவிக்கும் ஆண்கள்

image

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பெரும்பாலானோர் இன்னமும் தங்கள் முதல் காதலை நினைத்துக் கொண்டிருப்பதாகவும், 10-ல் 4 பேர், சமூக வலைதளங்கள் உதவியுடன் மீண்டும் முதல் காதலோடு தொடர்புகொண்டு (அ) இணைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற 10-ல் 4 பேரில் குறிப்பாக ஆண்கள் இன்னும் பழைய காதல் நினைவுகளை சுமப்பதாகவும் பதிலளித்துள்ளனர். உங்களுக்கு எப்படி?

News September 13, 2025

லோகேஷ் – அமீர்கான் படம் கைவிடப்பட்டதா?

image

லோகேஷ் கனகராஜ் – அமீர்கான் இணைந்து பணியாற்றவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘சித்தாரே ஜமீன் பர்’ பட நிகழ்ச்சியில் அமீர்கான், லோகேஷ் இயக்கத்தில் சூப்பர்ஹீரோ படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறினார். ஆனால் தற்போது கமல் – ரஜினி படம், கைதி 2-ல் லோகேஷ் கவனம் செலுத்தி வருகிறார். அமீர்கான் உடனான படம் கைவிடப்பட காரணம் என்ன? தேதிகள் பிரச்னையா என உறுதியான தகவல் தெரியவில்லை.

News September 13, 2025

செப்டம்பர் 13: வரலாற்றில் இன்று

image

*1948 – ஐதராபாத்தை இந்திய ஒன்றியத்தில் இணைக்க துணை பிரதமர் வல்லபாய் பட்டேல் ராணுவத்துக்கு உத்தரவிட்டார். *1960 – நடிகர் கார்த்திக் பிறந்தநாள். *2008 – டெல்லியில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 30 பேர் உயிரிழப்பு.

error: Content is protected !!