News March 29, 2024
நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை மாலை வெளியாகிறது. தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,403 வேட்பாளர்கள் 1,749 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1,085 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதேபோல விளவங்கோடு இடைத்தேர்தலுக்கு 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 14 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
Similar News
News November 6, 2025
பிஹாரில் வாக்குப்பதிவு நிறைவு

பிஹாரில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி, 60.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதிகபட்சமாக பெகுசராய் தொகுதியில் 67.32%, குறைந்தபட்சமாக ஷேக்புரா தொகுதியில் 52.36% வாக்குகள் பதிவாகியுள்ளது.
News November 6, 2025
சற்றுமுன்: விஜய்க்கு அஜித் மீண்டும் ஆதரவு

கரூர் விவகாரத்தில் <<18163956>>விஜய்க்கு ஆதரவாக அஜித்<<>> பேசியதாக தவெகவினர் SM-ல் பதிவிட்டு வந்தனர். அதேநேரத்தில், கூட்டம் கூட்டுவதை அஜித் விமர்சித்ததை, விஜய்க்கு எதிராக பேசியதாக மற்றொரு தரப்பு கூறியது. இந்நிலையில், தனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது என அஜித் தெரிவித்துள்ளார். விஜய்க்கு நல்லதையே தான் நினைத்திருக்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
News November 6, 2025
நுரையீரலே இல்லாமல் சுவாசிக்கும் அதிசய உயிரினம்

உருவத்தில் சிறிதாக இருப்பதால் நம்மை போல நுரையீரல் எறும்புகளுக்கு இல்லை. மாறாக, தனது உடலில் உள்ள Spiracles எனப்படும் துளைகள் வழியாகத்தான் இவை ஆக்ஸிஜனை சுவாசிக்கின்றன. துளை வழியாக உள்ளே செல்லும் ஆக்சிஜன் டிராக்கியா (Tracheae) எனப்படும் நுண்ணிய குழாய்கள் மூலம் செல்களுக்கு செல்கிறது. கார்பன் டை ஆக்சைடும் அதே வழியில் வெளியேறுகிறது. 1% பேருக்கு மட்டுமே தெரியும், SHARE THIS.


