News February 1, 2025
சின்ன கவுண்டர் படத்தயாரிப்பாளர் காலமானார்

ஆனந்தி பிலிம்ஸ் வி. நடராஜன் (70) நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில், மாரடைப்பால் காலமானார். இன்று மாலை 4 மணியளவில் மயிலாப்பூர் இடுகாட்டில் அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. இவர் ரஜினியின் முள்ளும் மலரும், விஜயகாந்தின் சின்ன கவுண்டர், ஜெயலலிதாவின் நதியை தேடி வந்த கடல் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். இவரின் தயாரிப்பில் தான் இயக்குனர் மகேந்திரன் திரையுலகில் அறிமுகமாகினார்.
Similar News
News March 5, 2026
எல்லா புகழும் விஜயகாந்துக்கே: பிரேமலதா

ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக சார்பில் சுதீஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, நீண்ட நாள் கனவு நிறைவேறும்போது ஏற்படும் மகிழ்ச்சி தற்போது கிடைத்துள்ளது. எல்லா புகழும் விஜயகாந்துக்குதான் என உருக்கமாக கூறினார். அத்துடன் விஜயகாந்த் தான் தெய்வமாக இருந்து தங்களை வழிநடத்தி வருகிறார் என்றும், தேமுதிகவின் ஒவ்வொரு வெற்றியும் அவருக்கு தான் சேரும் எனவும் தெரிவித்தார்.
News March 5, 2026
வங்கி கணக்கில் ₹10,000.. தமிழக அரசு ஹேப்பி நியூஸ்

வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையின் கீழ் வணிகர்களின் பிள்ளைகளுக்கு TN அரசு கல்வி நிதி வழங்கி வருகிறது. அந்த வகையில், கல்லூரி படிப்பு படிக்கும் வணிகர்களின் பிள்ளைகளுக்கு ₹5,000 வழங்கப்படுகிறது. அதேபோல், தொழில்கல்வி படிப்பவர்களுக்கு ₹10,000 வழங்கப்படுகிறது. இதில், விண்ணப்பித்து பயன்பெறுமாறு TN அரசு அறிவுறுத்தியுள்ளது. அருகிலுள்ள பத்திரப்பதிவு அலுவலகம் சென்று கூடுதல் விவரங்களை கேட்கலாம். SHARE
News March 5, 2026
சென்னை HC-ன் புதிய தலைமை நீதிபதி இவர்தான்

சென்னை HC-ன் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில் சுஷ்ருத் சென்னை HC-க்கு மாற்றப்பட்டுள்ளார். 1966-ல் ராய்பூரில் பிறந்த இவர், மத்தியப்பிரதேச HC-ல் 24 ஆண்டுகள் (1992 முதல்) வழக்கறிஞராக இருந்தார். 2018-ல் மத்தியப்பிரதேச HCன் நிரந்தர நீதிபதியாகி, 2025-ல் கேரள HC-ன் நீதிபதியாக மாற்றப்பட்டார்.


