News July 12, 2024
Filmfare: சிறந்த நடிகையாக சாய் பல்லவி தேர்வு

68வது Filmfare சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகையாக சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி (கட்டா குஸ்தி), ஐஸ்வர்யா ராய் (PS-1), கீர்த்தி சுரேஷ் (சாணி காயிதம்), த்ரிஷா (PS-1), கோவை சரளா (செம்பி), சாய் பல்லவி (கார்கி), நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) ஆகியோர் நாமினேஷனில் இருந்த நிலையில், சாய் பல்லவி சிறந்த நடிகையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News November 21, 2025
இதற்காகவே SIR-ஐ ஆதரிக்கிறோம்: EPS

வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் இடம் பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே SIR-ஐ ஆதரிப்பதாக EPS தெரிவித்தார். இப்பணி முழுமையாக நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக திமுக அதிகாரிகளுக்கு அழுத்தம் தருவதாக விமர்சித்தார். வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கு கூட திமுக முன் வரவில்லை என்றால், நாடு எப்படி முன்னேறும் என்றும் EPS கேள்வி எழுப்பினார். SIR-க்கு அதிமுக ஆதரவு தெரிவிப்பதை திமுக விமர்சித்து வருகிறது.
News November 21, 2025
‘SORRY அம்மா.. என் சாவுக்கு டீச்சர் தான் காரணம்’

ம.பி.,யில் 11-ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சோக முடிவை எடுப்பதற்கு முன் மாணவி உருக்கமாக கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், பள்ளியில் தனது டீச்சர் சித்ரவதை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், விரல்களுக்கு இடையே பேனாவை வைத்து அழுத்தி பனிஷ்மெண்ட் என கொடுமைப்படுத்தியதாக மாணவி வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
News November 21, 2025
ஜி20 மாநாடு இப்படித்தான் நடைபெறும்

உலக பொருளாதாரத்தில் 85% பங்களிப்பை செலுத்தும் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய, ஆப்பிரிக்க ஒன்றியங்களின் கூட்டமைப்பே ஜி20. பொருளாதார நிலைத்தன்மைக்காக, நாடுகளுக்குள் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. நடப்பாண்டில் முதல்முறையாக தென்னாப்பிரிக்கா <<18345371>>ஜி20<<>> உச்சிமாநாட்டை தலைமையேற்று நடத்துகிறது. ஆனால், வெள்ளையர்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி அமெரிக்கா இம்மாநாட்டை புறக்கணித்துள்ளது.


