News April 26, 2024
ஜனநாயகக் கடமையாற்றிய சினிமா பிரபலங்கள்

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில், சினிமா பிரபலங்கள் பலரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர். அந்த வகையில், கேரளாவில் நடிகர் சுரேஷ்கோபி தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். இதேபோல், கர்நாடகாவில் நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றினர்.
Similar News
News January 23, 2026
மார்ச்சில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகிறதா?

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை பிப்ரவரி 2-வது வாரத்திற்குள் முடிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விருப்ப மனுக்களை பெற்றபிறகு, மார்ச் 8-ல் திருச்சியில் நடைபெறவுள்ள திமுக மாநில மாநாட்டில் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வாக்குறுதிகள், விருப்ப மனு என விறுவிறுப்பில் உள்ள அதிமுக, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை இனிதான் எடுக்கும் எனவும் கூறப்படுகிறது.
News January 23, 2026
இதெல்லாம் பண்றீங்களா? கிட்னி ஸ்டோன் வரும்!

உட்கார்ந்தே இருப்பது, தண்ணீர் அருந்துவதையே மறப்பது, நைட் ஷிஃப்டில் பணிபுரிவதால் கிட்னி ஸ்டோன் உருவாகும் ஆபத்து பகல்நேரம் பணிபுரிபவர்களை விட 15% அதிகமாகும் என ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இதனை தவிர்க்க உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். நைட் ஷிஃப்ட் பார்ப்பவர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
News January 23, 2026
திமுகவின் முயற்சி கைகூடுமா?

திமுக கூட்டணியில் இணைய ராமதாஸ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு திருமா தரப்பு சுணக்கம் காட்டிவருகிறதாம். இதனால் விசிகவை சமாதானப்படுத்தும் முயற்சியில் திமுகவும் ராமதாஸ் தரப்பும் இறங்கியிருப்பதாக சொல்கிறார்கள். வரும் தேர்தலை எதிர்கொள்ள பல கட்சிகளின் கூட்டணி அவசியம் என திமுக கருதுவதால் விசிக இம்முடிவுக்கு மனமிறங்கி வருமா என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.


